மெரினாவில் ராேப் கார் சேவை! எப்போது முதல் தொடங்கும் தெரியுமா?

Latest News Rope Car Services At Marina : மக்கள் அதிகம் கூடும் பகுதியான மெரினா கடற்கரையில், ரோப் கார் சேவையை தொடங்குவதற்கான டெண்டரை, சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Dec 4, 2024, 11:00 AM IST
  • மெரினாவில் ரோப் கார் சேவை
  • சென்னை 2.0 திட்டத்தில் ஒரு அங்கம்!
  • எப்போது முதல் தொடங்கும்?
மெரினாவில் ராேப் கார் சேவை! எப்போது முதல் தொடங்கும் தெரியுமா?  title=

Latest News Rope Car Services At Marina : சென்னையில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் முதன்மையானது மெரினா கடற்கரை. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் சென்னை வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் முக்கிய சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது சென்னை மெரினா கடற்கரை. 

சிங்கார சென்னை 2.0

'சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை பெருநகர மாநகராட்சி எடுத்து வருகிறது. மக்களை கவரும் வகையில் பூங்காங்கள், சுற்றுலா  தலங்களை அமைப்பதில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக செம்மொழி பூங்கா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஆகியவைகளை குறிப்பிட்டு சொல்லலாம். 

சென்னையில் அமைந்துள்ள உலகிலேயே நீளமான கடற்கரை என பார்க்கப்படும் சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த பல்வேறு திட்டங்களை சென்னை பெருநகர மாநகராட்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு தரப்பிலும் கோரிக்கையாக வைத்த மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது சென்னை பெருநகர மாநகராட்சி. 

மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் இயற்றை எழிலை கண்டு களிக்கும் வகையிலும் இந்த ரோப் கார் சேவை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. சென்னை மெரினாவில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகிற 17-ந் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எப்போது முதல் தொடங்கும்? 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதையடுத்து இந்த பணிகள் முடிவடைந்த பிறகு ரோப் கார் சேவைகள் தொடங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியான பிறகுதான், உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து தெரியும். 

இந்த ரோப் கார் சேவை குறித்த திட்டத்தை, 2022ஆம் ஆண்டே அரசு அறிவித்திருந்தது. நேப்பியர் பாலம் முதல், நம்ம சென்னை செல்ஃபி பாய்ண்ட்-விவேகானந்தர் இல்லம் வரை இந்த சேவை தொடங்க இருந்தது. இதே போல, கடற்கறையின் 10 இடங்களில் ரோப் கார் சேவை அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான டெண்டர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், டெண்டர் ஏலத்தை எடுப்பவர்கள் நிர்ணயிக்கப்பட்ட பின்னர், விரைவில் இதற்குறிய பணிகள் முடுக்கிவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது!! 12 மணி நேரம் நடந்த விசாரணை..

மேலும் படிக்க | சேற்றை வாரி அடித்த சம்பவம்... அமைச்சர் பொன்முடி சொன்னது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News