‘கருடன்’ படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..

Latest News Garudan Movie Narikuravar People : கருடன் படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள், கோட்டாட்சியரிடம் புகார்; டிக்கெட் வாங்கி கொடுத்து தியேட்டருக்குள் அனுப்பிய வட்டாட்சியர்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 1, 2024, 04:26 PM IST
  • கருடன் படம் பார்க்க சென்ற நரிக்குறவ மக்கள்
  • உள்ளே அனுமதிக்க மறுத்த ஊழியர்கள்
  • வட்டாட்சியர் செய்த செயல்
‘கருடன்’ படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்.. title=

Latest News Garudan Movie Narikuravar People : ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் கடலூர் மாவட்டத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து பாத்திரங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த ஒரு வார காலமாக கடலூரில் தங்கி பாத்திர விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் நடிகர் சூரி நடத்த கருடன் படம் பார்ப்பதற்கா 30 பேர் வந்திருந்தனர். திரைப்படம் பார்ப்பதற்கு வந்தவர்களை திரையரங்கு நிர்வாகம் டிக்கட் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது.

டிக்கெட் வழங்குவார்கள் என காத்திருந்து அவர்கள் நிர்வாகத்திடம் கேட்டபோது டிக்கெட் வழங்க முடியாது என கூறிவிட்டதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சினிமா பார்க்க வந்த நரிக்குறவர் அனைவரும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு வந்து முறையிட்டனர். அங்கு இருந்த காவலர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க அவர்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | நரிக்குறவர் இன மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறதா கல்வி...? - தஞ்சையில் துயரம்

இதனைத் தொடர்ந்து நரிக்குறவர்கள் அனைவரும் தங்களது இரண்டு சக்கர வாகனத்தில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்தவர்கள் நீண்ட நேரம் மனு அளிக்க காத்திருந்த நிலையில் கோட்டாட்சியர் வட்டாட்சியர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து கடலூர் வட்டாட்சியர் பலராமன் சம்பவ இடத்திற்கு வந்து நரிக்குறவர்களிடம் பேசி பின்னர் அவர்கள் அனைவரையும் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று அவர்கள் அனைவருக்கும் டிக்கெட் வாங்கி கொடுத்து படம் பார்க்க அனுப்பி வைத்தார். அதன்பிறகு அவர்கள் டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு தியேட்டரில் உட்கார்ந்து ஆனந்தமாக கருடன் திரைப்படத்தை ரசித்தனர். கடலூரில் நரிக்குறவர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | நரிக்குறவர் இல்லத் திருமண விழாவுக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News