இந்த தர்மயுத்தத்தில் இந்தியா கூட்டணி நாட்டு மக்கள் பக்கம் உள்ளது: திருமாவளவன் பேட்டி

Lok Sabha Elections: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சொந்த கிராமமான செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது  தாயாருடன் வரிசையில் நின்று தனது  வாக்கினை பதிவு செய்தார். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 19, 2024, 12:58 PM IST
  • தனது வாக்கினை பதிவு செய்த திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
  • ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள் இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்: திருமாவளவன்
  • சங்க பரிவார் கும்பலுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம் இந்த பொது தேர்தல்: திருமாவளவன்
இந்த தர்மயுத்தத்தில் இந்தியா கூட்டணி நாட்டு மக்கள் பக்கம் உள்ளது: திருமாவளவன் பேட்டி title=

Lok Sabha Elections: தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரியில் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலும் இன்று, அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்று வருகின்றது. காலை 7 மணி முதல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகிறார்கள். 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சொந்த கிராமமான செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது  தாயாருடன் வரிசையில் நின்று தனது  வாக்கினை பதிவு செய்தார். 

வக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன், “நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பொது தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள் இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல். சங்க பரிவார் கும்பலுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம் இந்த பொது தேர்தல். 

இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்களின் பக்கம் இந்தியா கூட்டணி இருக்கிறோம். இந்தியா கூட்டணிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்புகள் விடுத்துள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜனநாயக விளிம்பியங்களை சிதைக்க துடிக்கிற சங்க பரிவார் கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. ஜனநாயகத்தையும் அரசியலப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் கவலையோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது.

மேலும் படிக்க | நாங்க போட்டாச்சு... நீங்க? ஜனநாயக கடமையாற்றிய தமிழக அரசியல் பிரமுகர்கள்!!

நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி அதாவது இந்தியா கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி பலம் இன்னொரு புறம் திமுக அரசின் மூன்றாண்டு கால நலத்திட்டங்கள் மூன்றாவதாக இந்தியா கூட்டணி முன்வைக்கக்கூடிய நாட்டு பாதுகாப்பு ஜனநாயக பாதுகாப்பு என்கிற கருத்தியல் பலம் ஆக இந்த மூன்று பலங்களுடன் எமது கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

எனவே பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இந்த தேசத்தை காப்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து எழுத தொடங்குகிறோம் என்பதை அறிவிப்பதற்கான நாள்தான் இன்றைய வாக்குப்பதிவு நாள். தமிழக மக்கள் திமுக கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள். எனவே ஜனநாயகம் பாதுகாக்கப்படும், அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். டெல்லியில் பாசிச பாஜக அரசு தூக்கி எறியப்படும். இந்திய கூட்டணியின் ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தல் ஆணையம் நேர்மையோடு செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியான பாசிச பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக அனைத்து தரப்பு மக்களாலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த ஆட்சியே தொடரும் என்ற எண்ணத்தில் அவர்கள் அவ்வாறு செயல்படலாம். அது தவறு. தேர்தல் ஆணையம் இந்த நாளிலிருந்து நடுநிலைமையோடு ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். ஒரு சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எமது கட்சி வேட்பாளர்கள் 20 பேர் களத்தில் உள்ளனர், அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன்” என கூறினார்.

மேலும் படிக்க | வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது 'இதை' கொண்டு போகாதீர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News