சென்னை கிண்டியில் உள்ள தனியார் கார் நிறுவன பராமரிப்பு நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தினசரி 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் 50 சதவீதம் தொற்று அதிகரித்து வருகிறது.
ஒமிக்ரான் தொற்றைப் பொறுத்தவரை பிஏ- 1 2 3 உள்ளிட்ட ஏழு வகையான தொற்று பரவி வருகிறது. தற்போது அதிகளவில் பிஏ 4, 5 வகைகளில் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1600 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 92 சதவீத நபர்கள் வீட்டில் தனிமை படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 8 சதவீத நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவமனை மூலம் சிகிச்சை பெறுவதற்காக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கொரோனா கேர் சென்டர் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | ஜீ தமிழ் நியூஸ் கல்வி கண்காட்சியில் பங்கேற்க முன்பதிவு எவ்வாறு செய்வது?
சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அரசு மருத்துமனைகளில் கொரோனாவுக்காக தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
தற்போதையை சூழலில் தொற்று ஏற்படுவது அதிகரித்தாலும் உயிர் பாதிப்பு குறைவாகவே உள்ளது. அதேபோல் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் சிறுவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம். பள்ளிச் செல்லும் குழந்தைகளின் மீது பெற்றோர்கள் தனி கவனம் செலுத்தி கண்காணிப்பது அவசியம்.
மேலும் படிக்க | ‘நாளைய இலக்கு’ - ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி!!
சென்னையில் 122 இடங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தோற்று பாதித்தவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக அந்த இடங்களில் மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR