சொற்கள் இல்லாவிட்டால் என்ன அதான் பெயர் இருக்கிறதே - மத்திய அரசை விளாசும் எம்.பி.

சொற்களை கண்டு அஞ்சுவது மக்கள் விரோத அரசுகளுக்கு புதிது இல்லை என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 14, 2022, 06:06 PM IST
  • நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் வெளியீடு
  • மத்திய அரசின் இந்த கட்டுப்பாடுக்கு பலரும் எதிர்ப்பு
சொற்கள் இல்லாவிட்டால் என்ன அதான் பெயர் இருக்கிறதே - மத்திய அரசை விளாசும் எம்.பி. title=

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் சில நாள்களில் கூடவிருக்கும் சூழலில், நாடாளுமன்ற அவைகளில் பேசக்கூடாத வார்த்தைகள் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டது. அதில் ஊழல், துரோகம், சர்வாதிகாரி, ஒட்டுக்கேட்பு, பாலியல் தொல்லை, வாய்ஜாலம் காட்டுபவர்,வெட்கக்கேடு,அழிவு சக்தி உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

மத்திய அரசின் இந்தக் கட்டுப்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். மேலும், மத்திய அரசு தடை செய்திருக்கும் வார்த்தைகள் எல்லாம் பாஜக அரசை விமர்சனம் செய்ய பயன்படுத்துபவை. அதனால்தான் அந்த வார்த்தைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இது அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கு எனவும் குரல்கள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க | மிஸ்டர் ஹிட்லர் : மன்னராட்சியை கொண்டுவர துடிக்கிறீர்களா! - கமல்ஹாசன் காட்டம்

இந்நிலையில் மதுரை எம்.பி., இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியல் - 2022 வெளியிடப்பட்டுள்ளது. அந்த சொற்கள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாது.

 

சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது ஒன்றும் புதிதல்ல. இந்த சொற்கள் இல்லாமல் போனால் யாரும் கவலைப்பட போவதில்லை.  உங்கள் பெயர்களே போதுமானது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | குரூப் 4 ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்?

முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் தெரிவித்த கண்டனத்தில், ”பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது. பாராட்டுகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க மன்னராட்சி முறை நடக்கிறதா? வள்ளுவரைப் பற்றிப் பேசும் பிரதமருக்கு 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' கதியை சுட்டிக்காட்ட யாருமில்லையா? ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே” என குறிப்பிட்டிருந்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News