பொள்ளாச்சியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி மக்கள் நீதி மைய கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மையத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கலந்துகொண்டு புதிதாக மக்கள் நீதி மையக் கட்சியில் இணைந்த தொண்டர்களுக்கு சால்வை அணிவித்து, மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு மக்கள் நீதி மையத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் பேட்டியில் கூறியதாவது: காங்கிரசுடனும் சரி, திராவிட முன்னேற்றக் கழககத்துடனும் சரி மக்கள் நீதி மையம் நட்பாக உள்ளது.ஆனால் இதுவரைக்கும் கூட்டணியில் என்ற அங்கம் வகிக்கவில்லை என்றாலும் கூட , மக்கள் பிரச்சினைகளை நம்முடைய தலைவர் எடுத்துச் சொல்லும் பொழுது அதற்கு ஆளும் அரசாங்கம் செவி சாய்த்து கொண்டு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. காங்கிரசுடன் மக்கள் நீதிமையம் ஒரு நல்ல சிறந்த நட்புறவு உள்ளது.
இன்றைக்கு தேசத்துக்கு பெரிய ஆபத்தை விளைவிக்க கூடிய ஒரு விஷயத்தை, ஒரு சர்வாதிகார ஆட்சி என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஆட்சியை வந்து தடுத்து நிறுத்துவதற்கும், நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக பாரத்ஜூடோ யாத்ராவை எடுத்துக் கொண்டாலும் சரி, ஈரோடு இடைதேர்தலை பார்த்தாலும் மக்கள் நீதி மையம் எந்த கட்சி வரக்கூடாது என்பதற்கான ஒரு நிலைப்பாடு எடுத்திருக்கிறார். கூட்டணி பற்றிய முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய காலங்கள் இருக்கிறது. இப்போதைக்கு அதைப்பற்றி கட்சியை வலுப்படுத்துவதற்கும் கட்சியை தேர்தலை சந்திப்பதற்காக விரைவுபடுத்தி கொண்டிருக்கிறோம். கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அந்த நேரத்துல தலைவர் மக்களின் மனதை அறிந்து நிர்வாகிகள் கருத்தை கேட்டு தொண்டர்களின் உணர்வை உணர்ந்து தலைவர் ஒரு சிறந்த மக்களுக்கான ஒரு முடிவு எடுப்பார்.
என்னைக்கு மக்களுடைய எண்ணங்களை அறிந்து எதிர்க்கட்சிகளும், நட்பு கட்சிகளும், கொடுக்கக்கூடிய ஆலோசனைகளை எந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, தன் முன்ன கூட்டியே ஒரு நிலைப்பாடு எடுத்திருந்தா கூட ,ஒரு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லும்பொழுது ,ஒரு அரசாங்கம் அதை கேட்கிறது என்றால், கேட்டு நடக்கிறது என்றால் ,தன்னுடைய நிலைப்பாடு மாற்றிக் கொள்வதினால் .அது சிறந்த அரசாங்கமா தான் இருக்க முடியும். அதுபோன்று திமுக இன்றைக்கு நிறைய விஷயங்கள்ல நட்பு கட்சியாக மக்கள் நீதி மையத்தின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு நிறைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு வருகிறார்கள் .மக்களின் கோரிக்கைகளை ஏற்று தன்னுடைய நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு இதுதான் ஒரு சிறந்த மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படக்கூடிய அரசாங்கம் என்னைக்கும் சிறந்த அரசாங்கம் தான் இருக்க முடியும் என்றார்.
மேலும் படிக்க | அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ