ஆம் ஆத்மி கட்சி: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன். மேலும் பத்து ஆண்டுகளில் 2வது மாநிலத்தில் ஆட்சியை பிடித்ததற்கு பாராட்டுக்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று (வியாழனன்று) அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின் இறுதியில் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்தது, காங்கிரஸ் மற்றும் எஸ்ஏடி-பிஎஸ்பி கூட்டணியைத் தோற்கடித்து 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி, பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அமரீந்தர் சிங் ஆகியோருக்கு தோல்வியை பரிசாக அளித்தது.
வாக்குப் பங்கின் அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சி மொத்தம் பதிவான வாக்குகளில் 42 சதவீதத்தைப் பெற்றது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அது 23.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளம் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அவர் சேர்ந்து இருக்கும் படத்தை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "ஆம் ஆத்மியின் அமோக வெற்றிக்காக நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் வாழ்த்துக்கள். கட்சி துவங்கிய 10 ஆண்டுகளில் இன்னொரு மாநிலத்தில் ஆட்சி அமைத்திருப்பது பாராட்டுக்குரியது" எனப் பதிவிட்டுள்ளார்.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடவேண்டிய வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாகக் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 11, 2022
மேலும் படிக்க: கோவா தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லும் மூன்று தம்பதிகள்!
ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தற்போது தேசிய அளவில் கவனம் செலுத்த களமிறங்கியுள்ளது. அதாவது குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களை குறிவைத்து அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, தற்போது இரண்டு மாநிலங்களில் ஒரு லோக்சபா தொகுதி, 3 ராஜ்யசபா தொகுதிகள் மற்றும் 156 எம்எல்ஏக்கள் என அபாரமாக வளர்ந்துள்ளது. இது மிகவும் உற்சாகமான முன்னேற்றம். இந்த வேகத்தில் எந்த அரசியல் கட்சியும் முன்னேறவில்லை.
மேலும் படிக்க: ‘பாடம் கற்போம், தொடர்ந்து பாடுபடுவோம்’ - காங்கிரஸ்
இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில், அக்கட்சி ஏற்கனவே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸால் காலியான இடத்தை நிரப்பி வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்ய ஆம் ஆத்மி முயற்சிக்கிறது. அடுத்த மாதம், கேஜ்ரிவால் மற்றும் பஞ்சாபின் நியமன முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாபின் வெற்றி ஹிமாச்சலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆம் ஆத்மி கூறுகிறது.
பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாப் மாநிலத்தின் நலனுக்கான அனைத்து உதவியும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கும் என உறுதியளிக்கிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார்.
அதற்கு "நன்றி" தெரிவித்து அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
I would like to congratulate AAP for their victory in the Punjab elections. I assure all possible support from the Centre for Punjab’s welfare. @AamAadmiParty
— Narendra Modi (@narendramodi) March 10, 2022
மேலும் படிக்க: காங்கிரஸ், ஆம் ஆத்மி...தொடங்கியது அரசியல் ஆட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR