தமிழகத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம் துவக்கம் -செங்கோட்டையன்

தமிழகத்தில் இன்று மாலை முதல் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2018, 10:03 AM IST
தமிழகத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம் துவக்கம் -செங்கோட்டையன் title=

தமிழகத்தில் இன்று மாலை முதல் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்...

மருத்துவப் படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்தியது. தமிழகத்தில் நீட் தேர்வுக்குரிய பயிற்சியளிக்க தனியார் நிறுவனங்கள் பெரும் தொகையை வசூலிக்கின்றன. 

இதனால் மிகுந்த பின்தங்கிய வகுப்பு மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதால், இலவச நீட் பயிற்தியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி இன்று முதல் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படத் தொடங்கும் என்றும், சுமார் 3200 ஆசிரியர்கள் பயிற்சியளிக்க உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் வெள்ளிகிழமை முதல் செயல்படத் தொடங்கும். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சுமார் 3200 ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். 

தமிழகத்தில் இருந்து இனி எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருந்தாலும் அவர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதும் நிலை வராது என அவர் தெரிவித்தார். 

 

Trending News