’எடப்பாடி பழனிசாமி ஒரு கோழைச்சாமி’ என அமைச்சர் கேஎன் நேரு கடும் தாக்கு

KN Nehru | பாஜகவுக்கு பயப்படும் எடப்பாடி பழனிசாமி ஒரு கோழைச்சாமி என அமைச்சர் கேஎன் நேரு கடுமையாக விமர்சித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 17, 2024, 01:07 PM IST
  • எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோழை
  • அதிமுக பாஜக கள்ளக்கூட்டணி நிரூபணம்
  • அமைச்சர் கேஎன் நேரு கடும் தாக்கு
’எடப்பாடி பழனிசாமி ஒரு கோழைச்சாமி’ என அமைச்சர் கேஎன் நேரு கடும் தாக்கு title=

KN Nehru, Edappadi Palaniswami | அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்ககுழு கூட்டத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என பல குற்றச்சாட்டுகளை ஆவேசமாக முன்வைத்தார். அவருக்கு அறிக்கை மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு. அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பாஜகவுக்கு பயப்படும் எடப்பாடி பழனிசாமி ஒரு கோழைச்சாமி என காட்டமாக விமர்சித்துள்ளார். 

அமைச்சர் கேஎன் நேரு (KN Nehru) விடுத்திருக்கும் அந்த அறிக்கையில், "பாஜக-வோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என்றும் சொல்லி ’கோழைசாமி’ பாஜக பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித் துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயம்! 

மேலும் படிக்க | பாமகவில் இணையும் ஆதவ் அர்ஜுனா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இப்படி பழனிசாமியின் (Edappadi Palaniswami) பயப் பட்டியலும் “எல்லாம் பயம் மயம்” எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது. புலிப்பாண்டியென அழுத்தம் கொடுக்கும் பழனிசாமி அவர்களேர குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா மாநிலங்களவையில் தோல்வி அடைந்திருக்கும். நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆதரவளித்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுக ஆதரவு.

அம்மையார் ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு. முத்தலாக் தடை சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என அதிமுக இரட்டை வேடம் போட்டது. முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை 2024-இல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்துக் கையெழுத்திட மறுத்தது. நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதங்களுக்கு மாற்ற முடியாது எனும் மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக பாஜக நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், கருத்து தெரிவிக்காமல் அதிமுக பதுங்கியது.

’நான் ஒரு விவசாயி’ என்று சொல்லிக் கொண்டே மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை பலமாக ஆதரித்தது மட்டுமின்றி அவற்றை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்த விஷவாயு நீங்கள். மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பாஜகவின் உன்னத தோழன் அதிமுக. இப்படி மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழைதான் பழனிசாமி. இந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமிதான் அதிமுக பொதுக்குழுவில் வீராவேசமாகப் பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார்.

பெட்ரோல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு என என்றைக்காவது கண்டித்து பழனிசாமி அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறாரா?, அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026-ல் அதிமுக மீண்டும் அரியணை ஏறும்” என்றெல்லாம் பொதுக்குழுவில் ஆக்ரோஷமாகப் பேசியிருக்கிறார். கோழைக்கு ஆசை என்ன? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது." காட்டமாக விமர்சித்துள்ளார். 

மேலும் படிக்க | நாக்கை கிழித்து டாட்டூ போட்ட 2 பேர் - திருச்சி போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News