'பீஸ்ட்' படத்தைத் தடை செய்க: முஸ்லிம் லீக் கோரிக்கை

விஜய் நடிப்பில் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகத் தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2022, 07:09 PM IST
  • இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளா?
  • வேதனை அளிக்கக்கூடிய விஷயம்
  • பீஸ்ட் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்
 'பீஸ்ட்' படத்தைத் தடை செய்க: முஸ்லிம் லீக் கோரிக்கை title=

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு  ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து இருப்பதாகக் கூறி குவைத்தில் படம் வெளியாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் தமிழகத்திலும் இப்படம் வெளியாவதைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தியுள்ளார். 

தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு அவர் எழுதிய கடிதத்தில், ''தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து வருவதை வழக்கமாகக் கொண்டு, இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற தோற்றத்தைத் திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்களைக் கூட திரைப்படக் கதாபாத்திரங்கள் இடம்பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புகளை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதைப் பார்த்து வருகிறோம். ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராகச் செயல்படுவது போலத் தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. 

மேலும் படிக்க |  ‘விஜய்- 66’ நடிகை இவர்தான்: கடைசி நேரத்தில் கன்ஃபார்ம்!

2015 பெருவெள்ளத்தின் இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிளை யாரும் மறந்துவிட முடியாது. கொரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூட தொட மறுத்த உடல்களை, அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள். இப்படி பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்துக் களத்தில் இறங்கி நிவாரண பணிகளை இஸ் லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்கமுடியாது.

உண்மை நிலை இப்படி இருக்கும் போது, இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக பீஸ்ட் திரைப்படத்தில் சித்தரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்துள்ள நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளிவந்தால் மோசமான சூழல் ஏற்படும். ஆகவே அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடை விதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.  இதற்குப் படக்குழு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

மேலும் படிக்க | கசிந்தது பீஸ்ட் கதை? ரசிகர்கள் அதிர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News