நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு அனுமதிக்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2018, 11:47 AM IST

Trending Photos

நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் title=

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இந்த திட்டம் மூலம் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் எனக் கூறியும், சட்டவிதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு என்ஜிஓ மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தது. 

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கியது. நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு அனுமதிக்கு தடை விதிக்க முடியாது. ஆனால் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது./

Trending News