பாய்லர் வெடித்து விபத்து: NLC-க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்த பசுமைத்தீர்ப்பாயம்...

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக என்எல்சி-க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது..!

Last Updated : Jul 9, 2020, 06:42 PM IST
பாய்லர் வெடித்து விபத்து: NLC-க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்த பசுமைத்தீர்ப்பாயம்...   title=

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக என்எல்சி-க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது..!

பாய்லர் வெடித்த விபத்து தொடர்பாக என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. என்எல்சியில் ஜூலை 1 ஆம் தேதி பாய்லர் வெடித்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி NLC இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்தனர். தற்போது வரை என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள், 9 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 2 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவார்கள்.

READ | புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனாவா? வெளியானது அதிர்ச்சி தகவல்...

இந்நிலையில் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர்  வெடித்த விபத்து தொடர்பாக  என்.எல்.சி-க்கு இடைக்கால அபராதத் தொகையாக ரூ. 5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்எல்சி நிர்வாகம் 30 லட்ச ரூபாய் பணமும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் கொடுப்பதாக உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News