பாரம்பரிய விழாவை நடனத்துடன் கொண்டாடிய தோடர் இன மக்கள்..! வீடியோ

நீலகிரியில் வசிக்கும் தோடர் இன மக்கள், தங்களின் பாரம்பரிய விழாவான மொர்பர்த் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Dec 26, 2021, 05:09 PM IST
பாரம்பரிய விழாவை நடனத்துடன் கொண்டாடிய தோடர் இன மக்கள்..! வீடியோ title=

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மந்து என்ற வனப்பகுதியை ஒட்டி தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை எப்போதும் கடைபிடித்து வருகின்றனர். மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள முத்தநாடு மந்து, தோடர் இன மக்களின் தலைமை இடமாக திகழ்கிறது. இங்குள்ள தோடர் இன மக்கள் புத்தாண்டு பண்டிகையை ஆண்டுதோறும் ’மொர்பர்த்’ என்ற பெயரில் கொண்டாடுவர்.

ALSO READ | ஆதிபராசக்தியாக மாறிய கள்ளக் காதலி

இன்று இந்த விழாவையொட்டி அங்குள்ள மக்கள் விரதமிருந்து ’மூன்போ’ கோவிலில் கூட்டமாக சென்று வழிபட்டனர். வழிபாட்டின்போது அவர்கள் சந்தன பொட்டு வைத்து, தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து மூன்போ கோவிலில் இருந்து ஒர்யள்வோ கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து சென்றனர். அதன்பின்னர் மீண்டும் மூன்போ கோவிலுக்கு சென்று வழிபட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அங்கு தங்களது பாரம்பரிய நடனத்தையும் ஆடி மகிழ்ந்தனர். இதனையடுத்து ஆண்கள் தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் வெண்ணை பூசப்பட்ட இளவட்ட கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றது. 

இந்த போட்டியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு 7௦ கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கி, அதனை முதுகுக்கு பின்புறமாக போட்டனர். நாட்டில் நல்ல மழை பெய்து, விளைச்சல் அதிகமாகி, வளர்ப்பு பிராணிகள் நன்றாக இருக்க வேண்டும் என வழிபட்டனர். அப்போது பேசிய ஒருவர், உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா நோயிலிருந்து மக்கள் கூடிய விரைவில் விடுபட வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டதாக கூறினார்.

ALSO READ | சுனாமி: ஆறாத வடு... தீராத வலி.. ஆழிப்பேரலையின் 17-ம் ஆண்டு நினைவு நாள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News