நிவர் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..!
நிவர் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் நாளை (26/11/2020) முதல் நவம்பர் 28 வரை 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிகிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை நிவர் புயலாக (Nivar Cyclone) உருவெடுத்து, இரவில் தீவிர புயலாகவும் வலுவடைந்துள்ளது. இது அதி தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதி, குறிப்பாக புதுச்சேரி (Puducherry) அருகில் இன்று மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
ALSO READ | மள மளவென நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரி; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயலின் வேகம் 11 கி.மீ ஆக நகர்ந்து வருகிறது. இன்று காலை 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. கடலூரில் இருந்து 240 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ, சென்னையில் இருந்து 300 கீ.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில், நிவர் புயல் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரியில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு 3 நாட்களுக்கு (நவ.,28 வரை) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. ஏரி முழு கொள்ளவை எட்டிய உடன் ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும். அந்த வகையில் முழு கொள்ளவை எட்டியதால் 3 மதகுகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.