Chennai Latest News Updates: பொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த எவ்வித தடையும் இல்லை, அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல்துறை தரப்பில் இருந்து கூறுகையில்,"பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அத்தகைய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
இதுகுறித்து தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், வசதிக்காக தாம்பரம் நகர போலீசார் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உதவி எண் அறிவிப்பு
சவாலான வானிலையின் போது வாகனங்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய, குடிமக்களுக்கு எங்கள் காவல் கட்டுப்பாட்டு அறை உதவும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியே எங்களின் முதன்மையான முன்னுரிமைகள் மற்றும் தேவையான ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எதேனும் உதவி தேவைபட்டால் போலீஸ் கட்டுப்பாட்டு எண்ணான, +9194981 81500 என்ற இந்த எண்ணை தொடர்பு கொள்ள தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் பள்ளிக்கரணை பகுதியில் 10 நாட்களுக்கு மழை நீர் வடியாமல் வீடுகளில் உள்ள அனைத்து கார்களும் சேதம் அடைந்தது. இந்தாண்டின் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளது. அதுமட்டுமின்றி தொடர் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ரூ.500 அபராதம் விதிப்பு
அந்த வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் கார்களை இன்று மாலையில் இருந்தே பள்ளிக்கரணை மேம்பாலத்தின் மேலே வாகன உரிமையாளர்கள் நிறுத்தி வருகின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னைக்கு முறையே ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இந்த வருடம் தங்களது கார்கள் எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் இருக்க பள்ளிக்கரணை மேம்பாலம் மேல் நிறுத்தி வரும் கார்களுக்கு பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து காரின் முன் பக்க கண்ணாடியில் அபராத காப்பியை வைத்து விட்டு செல்கின்றனர். இதுகுறித்த காட்சிகளும் நம்மிடம் உள்ளது.
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது மற்றும் தடையை மீறி வாகனம் நிறுத்தியது உள்ளிட்ட வாகன சட்டத்தின் கீழ் 500 ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர். இதுகுறித்து கார் உரிமையாளர்கள்,"பாதுகாப்பிற்காக தங்களது கார்களை மேம்பாலத்தின் மேலே நிறுத்தி வருகிறோம். போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தால், கார்களை வேறு எங்கே சென்று வந்து நிறுத்துவது" என புலம்பினர். தற்போது இந்த விஷயம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவியதை அடுத்து போலீசார் அபராதம் ஏதும் விதிக்கப்படாது என விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க | கனமழையை எதிர்கொள்ள நடவடிக்கை என்ன? துணை முதலமைச்சர் உதயநிதி பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ