திருவண்ணாமலை : பழனிச்சாமி அணியில் இருக்கும் 90% பேருக்கு பதவி வர பக்கபலமாக இருந்தவன் நான் என்றும் பதவிக்காக அலைபவர்கள் நானும் ஓபிஎஸ்சும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக அருணாசலேஸ்வரர் தரிசிக்க வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை வந்து அருணாசலேஸ்வரர் தரிசித்து விட்டு இன்று மாலை சேலத்தில் நடைபெறவுள்ள பொது கூட்டத்திற்கு செல்ல உள்ளதாக தினகரன் தெரிவித்தார்.
பாமகவின் கூட்டணிக்காக அதிமுக சென்றிருக்கும் நிலையில் அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு சில தனி நபர்களின் சுயநலம், பதவி வெறி, பணத்திமிரினால், துரோக புத்தியினால் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா உருவாக்கிய அந்த மாபெரும் இயக்கம் இன்றைக்கு வீச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், இரட்டை இலை என்ற மாபெரும் மக்கள் சின்னம் இருந்தும் அதை அவர்கள் 2019 தேர்தலில் ஆட்சி அதிகாரம் இருந்த போதிலும் வெற்றி பெற முடியவில்லை Money பவர் Muscle பவர் இருந்தும் தோல்வியை சந்தித்த அவர்கள் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியை தழுவினர் என்று கூறினார்.
பழனிச்சாமி கம்பெனி செய்த ஊழல்களால் முறைகேடுகளால் சுயநல நிர்வாகத்தால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்றினர் என்றும், பழனிச்சாமியின் சுயநலத்திற்கும், துரோக சிந்தனைக்கும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப விரைவில் பழனிச்சாமிக்கு மக்கள் மிக விரைவில் உறுதியாக தண்டனை அளிப்பார்கள் என்று கூறினார், அசுரனின் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்த பிறகு அம்மாவின் இயக்கம் மீண்டும் வலுப்பெறும் என்றார், உண்மையான தொண்டர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் ஓபிஎஸ்சும் இணைந்துள்ளோம் என்றார்.
மேலும் படிக்க - பாஜக வேட்பாளர், தொகுதி பங்கீடு எப்போது நிறைவடையும்? வானதி சீனிவாசன் கொடுத்த அப்டேட்
தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் மூன்றாண்டு கால திமுக ஆட்சி என்பது சனியனுக்கு பயந்து காலன் கையில் கொடுத்தது போல் உண்டு என்று பேசியவர் தமிழ்நாட்டில் போதைப்பொருள் மற்ற மாநிலங்களை விட அதிகமாக உள்ளது என்றார், பழனிச்சாமி அணியில் இருக்கும் 90% பேருக்கு பதவி வர பக்கபலமாக இருந்தவன் நான் என்றும், பதவிக்காக அலைபவர்கள் நானும் ஓபிஎஸ்சும் இல்லை என்றும் கூறிய அவர் துரோகம் வீழ்த்தப்படும் என்றார்.
ராஜதந்திரம் என்ற பெயரில் துரோகம் செய்பவர்கள் எல்லாம் வீழ்த்தப் படுவார்கள் என்பதற்கு உதாரணமாக பழனிசாமியின் வீழ்ச்சி இருக்கும் என்றார், தமிழ்நாட்டில் வெற்றி பெற்று தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் பிரதமருக்கு இல்லை என்றும், நோட்டாவையே வெல்ல முடியாத பாஜக என்று முன்பு கூறியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர், ஆர் கே நகர் தொகுதியில் நோட்டா பெற்ற வாக்குகளை கூட பெறவில்லை என்று எதார்த்தத்தை தான் கூறியிருந்தேன் என்று தெரிவித்தார்.
ஆனால் சட்டமன்றத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட வெற்றி பெறவில்லை, பாஜக நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது என்று கூறியவர் தற்பொழுது அந்த கூற்று இல்லை என்று பல்டி அடித்து பேசியவர், தொண்டர்களின் விருப்பத்தோடு தான் பாஜகவிற்கு சென்றுள்ளோம் என்றார், பாஜகவிற்கு நாங்கள் மனப்பூர்வமாக சென்றுள்ளோம் என்று தெரிவித்த அவர் எந்த வித நிபந்தனையும் நிர்பந்தமும் எங்களுக்கு இல்லை என்றார்.
வெளிநாடுகளில் இருந்து ஊடுருவும் போதை பொருட்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ளது என்றும், தமிழகத்தில் அதிக அளவு உள்ளது என்றும் தெரிவித்தார், சிஏஏ குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது எவருடைய குடியுரிமையும் பறிப்பது இல்லை என்றும் குடியுரிமை கொடுக்கும் சட்டம் என்றும் சிஏஏ திருத்தச் சட்டம் கொண்டு வருவதால் எந்தவித தவறும் இல்லை என்றார்.
மேலும் படிக்க - பாஜக பற்றி அறிக்கைவிட பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா? டிஆர்பாலு சரமாரி கேள்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ