Tamil Nadu North Chennai Election Result 2024: பாஜக? திமுக? வட சென்னை தொகுதியில் வெற்றி யாருக்கு?

Tamil Nadu North Chennai Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வட சென்னை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிட்டன.  

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2024, 07:54 AM IST
  • முக்கிய தொகுதியான வட சென்னை.
  • திமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.
  • திமுகவின் கோட்டையாக உள்ளது.
Tamil Nadu North Chennai Election Result 2024: பாஜக? திமுக? வட சென்னை தொகுதியில் வெற்றி யாருக்கு? title=

Tamil Nadu North Chennai Election Result 2024: சென்னையில் உள்ள வட சென்னை மக்களவை தொகுதி முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொகுதியில் வெற்றி பெறுபவர்கள் அதிக செல்வாக்கு மிக்க நபராக பார்க்கப்படுகின்றனர். தற்போதைய எம்பியாக திமுகாவை சேர்ந்த டாக்டர். கலாநிதி வீராசாமி உள்ளார். இவர் கடந்த 2019 தேர்தலில் 4,61,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிகவின் ஆர். மோகன்ராஜ் என்பவரை தோற்கடித்தார். 

வட சென்னை தொகுதியில் 2019 ஆண்டு 64.07 % வாக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 60.13 சதவீதமாக இருந்தது. வட சென்னை தொகுதியில் மொத்தம் 14,96,224 வாக்காளர்கள் உள்ளனர். 

மேலும் படிக்க | NDA vs INDIA: பிரதமரை தீர்மானிக்கும் 'இந்த 6 மாநிலங்கள்' - நாளைக்கு இதுதான் ரொம்ப முக்கியம்

வடசென்னை சட்டமன்ற தொகுதிகள்

திருவொற்றியூர்,
டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்,
பெரம்பூர்,
கொளத்தூர்,
திரு.வி.க. நகர் (தனி),
இராயபுரம்

வட சென்னை மக்களவைத் தொகுதி மொத்த வாக்காளர்கள்

மொத்த வாக்காளர்கள்   :14,96,224
ஆண் வாக்காளர்கள்       : 7,30,395
பெண் வாக்காளர்கள்      :7,65,286            
மூன்றாம் பாலினத்தவர் : 543 

வடசென்னை தொகுதி: 2019 மக்களவைத் தேர்தல் வெற்றி நிலவரம்

வெற்றி பெற்றவர் - கலாநிதி வீராசாமி திமுக - பெற்ற வாக்குகள் - 590986
இரண்டாம் இடம் -  மோகன்ராஜ் தேமுதிக - பெற்ற வாக்குகள் - 129468
மூன்றாம் இடம் - மெளரியா மநீம பெற்ற வாக்குகள் - 103167

வட சென்னை தொகுதி வேட்பாளர்கள் நிலவரம்

வட சென்னை தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருவொற்றியூர், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி), இராயபுரம் ஆகியவை ஆகும். இந்த ஆண்டு 2024 மக்களவை தேர்தலில் வட சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாரதிய ஜனதா கட்சி சார்பில் பால் கனகராஜ் , திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். 

வட சென்னை தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

வட சென்னை மக்களவைத் தொகுதியில் இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களில் திமுக 11 முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி 3 முறையும், அதிமுக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது வட சென்னை தொகுதியின் எம்பியாக உள்ள கலாநிதி வீராசாமி திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமியின் மகன் ஆவார். மருத்துவரான இவர் திமுக மருத்துவ அணியில் நீண்ட காலமாகப் உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கு தான் இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. காரணம் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்காக பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக பாஜகவை சேர்ந்த பால் கனகராஜ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | நாளை வருகிறது நாடே காத்திருக்கும் தேர்தல் முடிவுகள்: ECI இணையதளத்தில் காண்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

 

Trending News