விருதுநகர் மாவட்டம் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். டி.குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜ், முனியசாமி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் செந்தில்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் சென்னை சென்று தலைமறைவானார். அங்கு இருந்த செந்தில்குமார் திடீரென மாயமானதாகி விட்டதாகவும்,அவரை கண்டுபிடிக்க கோரியும் அவரது மனைவி போலீசில் புகார் செய்தார்.
மேலும் படிக்க | கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை - ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம்..!
புகாரின்படி விசாரித்ததில் அவரை வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் கொலை செய்து உடலை வீசியது தெரிந்தது. விசாரணையில் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் சுட்டுக் கொன்று, அவரது உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரிந்தது. இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து வரிச்சியூர் செல்வம், உள்ளிட பலரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வரிச்சியூர் செல்வம், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கில் புதிதாக ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் காவல் துறையினர் மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
மேலும் படிக்க | தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ