இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ–மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் என மொத்தம் 56 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் உள்ளன. மே 1-ம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அக்னி வெயிலின் முடிவடைந்துள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளி திறக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் எதிர் பார்த்திருந்தனர். மேலும் ஆசிரியர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால் திட்டமிட்டபடியே ஜூன் மாதம் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கபடும் என்று கல்வித்துறை அறிவித்தது.
மாணவ மற்றும் மாணவிகள் இன்று பள்ளிக்கூடங்களுக்கு வரும்போது அவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாண, மாணவிகளுக்கு தேவையான இலவச நோட்டுகள், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்பது கூறிப்பிடதக்கது.