O. Panneerselvam vs. Edappadi Palaniswami: அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொடங்கிய உட்கட்சி பூசல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏறத்தாழ 7 ஆண்டுகளைக் கடந்தபிறகும் பல்வேறு வழிகளில் அதிமுக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான யுத்தம் மீண்டும் தொடங்க இருக்கிறது. அதிமுக என்ற கட்சியை தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை பாஜக இல்லாமல் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து எதிர்கொள்ளும் முடிவில் இருக்கிறார்.
மேலும் படிக்க | பொங்கலுக்கு ரூ.238.92 கோடி ரூபாய் போதுமா? மக்களுக்கு பொங்கல் பரிசு அதிகரிக்குமா?
அவருடன் இருக்கும் பெரும்பாலான தலைவர்களின் முடிவு இதுவாக இருக்கிறது. எஸ்பி வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் பாஜக கூட்டணியை விரும்புவதாகவும், ஆனால் மாநில அளவில் அதிமுக இக்கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றனர். ஆனால் அதற்கு பாஜக தரப்பில் இசைவு தெரிவிக்கப்படவில்லை. தங்களது தலைமையிலேயே தேர்தலை சந்திக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள். அத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், அதிமுகவுக்கு எதிராக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இந்த புள்ளியில் இருக்கும் சிக்கலை வைத்து தான் பன்னீர்செல்வம் தனக்கான அரசியல் விளையாட்டை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.
அதிமுகவில் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு இருந்தாலும், அண்மையில் திருச்சி வந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதில் தன்னுடைய ஆதங்கத்தையும், மோடியின் ஆதரவையும் கேட்டிருக்கிறார் அவர். அதற்கு மோடியும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம். அந்த உற்சாகத்தில் இருக்கும் பன்னீர்செல்வம் எப்படியாவது அதிமுகவில் தன்னுடைய இருப்பை தக்க வைக்கும் நோக்கில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்துவிட்ட அவர், எடப்பாடி பழனிசாமியின் ரகசியங்களை வெளியிடுவேன் என புதுகுண்டை பொதுவெளியில் தூக்கிவீசியிருக்கிறார்.
குறிப்பாக எடப்பாடி தொடர்பான சில ரகசிய பைல்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதனை டெல்லிக்கு அனுப்பினால் அவர் திகார் சிறைக்கு செல்ல வேண்டும் என எச்சரித்திருக்கிறார். மோடியிடமும் இதுகுறித்து தெரிவித்திருக்கும் பன்னீர்செல்வம், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி எடுப்பதாகவும், அவரை வளர்த்துவிட்டால் உங்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சனை வரும் என்றும் கொளுத்தி போட்டிருக்கிறாராம். இதனையும் நோட் பண்ணி வைத்திருக்கும் டெல்லி, இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் புகைச்சலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது. ஒருவேளை எடப்பாடி, பாஜகவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்தால் அவரை வழி கொண்டு வருதற்கான அக்ஷனும் தயாராகவே இருக்கிறதாம்.
இதனை அறிந்து வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, மாநிலத்தில் எங்களுக்கு இருக்கும் பலத்தை கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று, அதன்பிறகு உங்களுக்கு ஆதரவு தருகிறோம். அதுவரை எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என பாஜக மேலிடத்துக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் டெல்லி இந்த விஷயத்தில் அமைதியே காட்டுகிறதாம். இந்த சூழலில் தான் பன்னீர்செல்வம் மோடியை சந்தித்துவிட்டு, எடப்பாடிக்கு எதிரான அரசியல் விளையாட்டை தொடங்கியிருக்கிறார். அது அவருக்கு கைகொடுக்குமா என்பது நாடாளுமன்ற தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க | திமுகவின் கு.க.செல்வம் மறைவு..! 2 மாதங்களாக கோமாவில் இருந்துள்ளார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ