சென்னை பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித்(37). இவர் வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதியில் துணி கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இரவு எட்டு மணியளவில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இவரது கடைக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி துணிகளை திருடியதுடன் ரூ.10,000 பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் ஜாவீத் பணம் கொடுக்க மறுத்ததால் கையில் இருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டியுள்ளனர்.
அப்போது கடைக்குள் இருந்து வந்த கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை கண்ட மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இது தொடர்பாக செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பொன்னப்பன் தெரு பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், தப்பியோடியவர்களில் 2 பேர் ஏற்கெனவே பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் பதுங்கியிருந்த வியாசர்பாடி பிவி காலனி பகுதியைச் சேர்ந்த கலை என்ற கலைச்செல்வன், மாதவரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்ற பச்சை பாம்பு, அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற ஜோதிகுமார், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தினகரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
மேலும் படிக்க | சென்னை அருகே துப்பாக்கி முனையில் 72 ரவுடிகள் கைது!!
மேலும், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 3 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸாரின் விசாரணையில் வியாசர்பாடி பி.வி காலணி பகுதியில் 2 ரவுடி கும்பல் செயல்பட்டு வருவது தெரியவந்தது. அதில் ஒரு ரவுடி கும்பலை சேர்ந்த தொப்பை கணேசன் என்பவர் இன்று அதே பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாவில் பங்கேற்க வருவதை அறிந்திருந்த எதிர்கோஷ்டியினர் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி நாட்டு வெடி குண்டுகள் மற்றும் பட்டாகத்தி சகிதம் பதுங்கியிருந்துள்ளனர்.
இதனிடையே போதையில் துணிக்கடையில் தகராறில் ஈடுபட்டதால் போலீஸாரின் பிடியில் ரவுடிகள் நால்வரும் சிக்கினர். அவர்கள் மீது வழக்குபதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | ரவுடிகள் அட்டகாசம்: ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு, நடத்துனரை மிரட்டி பணம் பறிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR