Pongal 2023: சென்னையில் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

Happy Pongal 2023: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டதால் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 14, 2023, 09:19 AM IST
Pongal 2023: சென்னையில் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம் title=

தமிழகத்தின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை முதலே மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்ப தொடங்கியதால் சாலைகளில் வாகனங்கள் அலைஅலையாக சென்றன. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் இதர பகுதிகளில் இருக்கும் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக திரண்டதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சென்னையில் மக்கள் கூட்டம்

சென்னையை பொறுத்தவரை பிரதான ரயில் நிலையங்களான சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் வெள்ளமென நிரம்பி வழிந்தனர். குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகளவு காணப்பட்டது. மதுரை, நெல்லை, திருச்சி, கன்னியாக்குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் அதிக எண்ணிக்கையில் திரண்டதால் முன்பதிவில்லா ரயில் பெட்டி மூச்சுவிடுவதற்கு கூட இடமில்லாமல் இருந்தது. உடமைகள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்வோரின் நிலை பரிதாபத்துக்குரியதாகவே இருந்தது. இடம் கிடைக்காதவர்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்ல தொடங்கினர். 

மேலும் படிக்க | களைகட்டியது போகி கொண்டாட்டங்கள்! கொரோனாவுக்கு பிறகு கோலாகல பொங்கல்

பேருந்து நிலையங்களிலும் கூட்டம்

ரயில் நிலையங்களைத் தொடர்ந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் திக்குமுக்காடியது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும் கூட்ட நெரிசலை ஒழங்குபடுத்துவதில் சிரத்தையோடு செயல்பட்டுக் கொண்டிருந்தனர். கோயம்பேடு தவிர கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்தும் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அனைத்து பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பொங்கலுக்கு செல்வோரின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மெட்ரோ ரயிலிலும் கூட்டம்

பொங்கல் பண்டிகைக்கு செல்வோர் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்காக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொண்டனர். விரைவாக கோயம்பேடு மற்றும் சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு செல்ல முடியும் என்பதால், மெட்ரோ சேவையை மக்கள் தேர்ந்தெடுத்தனர். அதற்கேற்ப மெட்ரோ நிர்வாகமும் சேவையை துரிதமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தது. 

மேலும் படிக்க | Happy Pongal 2023: பொங்கல் பண்டிகை அன்று இந்த உணவுகளை ட்ரை பண்ணி பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News