சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சஹியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு..!
உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சஹியை சென்னை உயர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில் ரமானி மேகாலாய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனால், தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணி மாறுதலாக மறுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்தல் மற்றும் பணியிட மாற்றம் செய்கிற உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு அக்டோபர் 15 ஆம் தேதி பரிசீலனை செய்தது. அதன் பிறகு, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சஹியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணி இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 13 ஆம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கவும் குடியரசுத் தலைவர் உத்தரவு. உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஏற்று ஏபி சஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தார் குடியரசுத் தலைவர் ஒப்புதல்.