பாடலாசிரியரும்,அரசவைக் கவிஞருமான புலமை பித்தன் வரலாறு!!

"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (MGR) நடிப்பில் வெளியான குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற நான் யார் ? நான் யார் ? என்ற பாடலை எழுதி பட்டி தொட்டியெங்கும் ஒரே பாடலில் புகழின் உச்சிக்கு சென்றார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களுக்கு இவரே பாடல்களை எழுதினார்.

Written by - Tamilarasan Palaniyappan | Last Updated : Sep 8, 2021, 03:53 PM IST
  • பாடலாசிரியரும்,அரசவைக் கவிஞருமான புலமை பித்தன் வரலாறு!!
  • "தமிழ் மேல் கொண்ட காதலால் தன்னுடைய பெயரை "புலமை பித்தன்" என்று மாற்றிக் கொண்டார்.
  • எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களுக்கு இவரே பாடல்களை எழுதினார்.
பாடலாசிரியரும்,அரசவைக் கவிஞருமான புலமை பித்தன் வரலாறு!! title=

பிறப்பு : 

தமிழ்க் கவிஞரும் , திரைப்பட பாடலாசிரியருமான "புலவர் புலமை பித்தன் (Puzhavar Puzhamai Pithan) கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளம் பாளையம் எனும் சிறிய கிராமத்தில் 06.10.1935 ஆம் ஆண்டு பிறந்தார்.இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும்.ஆனால் இவர் "தமிழ் மேல் கொண்ட காதலால் தன்னுடைய பெயரை "புலமை பித்தன்" என்று மாற்றிக் கொண்டார்.

படிப்பு , பணி :

திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதற்காக கோயம்புத்தூரில் இருந்து 1964 இல் சென்னை வந்துள்ளார்.பின்னர் அவர் "சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர தன்னுடைய ஆரம்பக்  காலகட்டங்களில் "பஞ்சாலையில் தொழிலாளியாகவும் வேலை பார்த்துள்ளார்.அங்கு வேலை பார்த்துக் கொண்டே பேரூரில் உள்ள தனித்தமிழ் (Thani Tamizh) கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

திரைத்துறையில் தடம் :

திரைப்படத்திற்கு பாடல்கள் எழுத வேண்டும் என்ற வேட்கை காரணமாக சென்னை வந்த அவருக்கு 1968ஆம் ஆண்டு  பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (MGR) நடிப்பில் வெளியான குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற நான் யார் ? நான் யார் ? என்ற பாடலை எழுதி பட்டி தொட்டியெங்கும் ஒரே பாடலில் புகழின் உச்சிக்கு சென்றார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களுக்கு இவரே பாடல்களை எழுதினார்.

ALSO READ : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 15இல் திமுக முப்பெரும் விழா!

உதாரணத்திற்கு புலமைப்பித்தன் பாடல் எழுதிய படங்கள் :

"அடிமைப் பெண்
நல்ல நேரம்
உலகம் சுற்று வாலிபன்
இதயக்கனி
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
நாயகன்
பணக்காரன்
கை கொடுக்கும் கை
தாவணிக் கனவுகள்
இது நம்ம ஆளு
உன்னால் முடியும் தம்பி
அமைதிப்படை
நந்தா
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போன்ற படங்களுக்கும் இவை தவிர இன்னும் நிறைய திரைப் படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.

எம்.ஜி.ஆருடன் நெருக்கம் : 

எம்.ஜி.ஆரும், இவரும் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வந்ததால் காலப்போக்கில் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாயினர்.எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமானவர்கள் பட்டியலில் "புலமை பித்தனுக்கு தனி இடம் உண்டு.

அரசியல் பிரவேசம் :

திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வந்த புலமை பித்தன் பின்னர் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க (ADMK) வின் அவைத்தலைவராகவும் , தமிழ்நாடு சட்டமன்ற மேலவை துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்தபோது இவரை "அரசவைக் கவிஞர் (Arasavai Kavingar) ஆக நியமித்தார்.மேலும் தமிழ் மொழிப்பற்றும் , தமிழீழ இன உணர்வு காரணமாக "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ( Prabhakaran) மீதும் பற்றுக் கொண்டிருந்தார்.இதன் காரணமாக இவருடைய இல்லத்திற்கு "தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் மற்றும் பேபி சுப்பிரமணியம் உள்ளிட்ட புலிப்படை தளபதிகளும் , விடுதலைப் புலிகளும் இவருடைய வீட்டிலேயே தங்கி தமிழ் ஈழ விடுதலைக்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.விடுதலை புலிகள் (Viduthalai Puzhigal) அமைப்பைச் சேர்ந்தவர்கள்.இவருடைய இல்லத்தை இரண்டாம் தாயகம் என்றே  அழைத்து வந்துள்ளார்கள்.

விருதுகள் : 

1978 ஆம் ஆண்டு "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திற்காகவும் பின்னர் 1981ஆம் ஆண்டு வெளியான "எங்கம்மா மகாராணி போன்ற திரைப்படங்களுக்காக "சிறந்த பாடாலாசிரியருக்கான விருதுகளை புலமைப்பித்தன் வாங்கியுள்ளார். இது தவிர "தமிழக அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டு "பெரியார் விருது (Periyar Award) வழங்கி கவுரவித்தது.

எழுதிய நூல்கள் :

திரைப்பட பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி "பாவேந்தர் பிள்ளைத் தமிழ் , புரட்சித் தீ மற்றும் எது கவிதை? போன்ற கவிதை புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "பாவேந்தர் பிள்ளைத் தமிழ் நூல் (Pavendhar Pillai Tamizh) சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை தமிழ்த்துறை (MA Tamil literature Students) மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இறப்பு : 

ஆசிரியர் , தமிழ்மொழிப் பற்றாளர் , தமிழ் ஈழ தேசியவாதி, அரசவைக் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் , அரசியல் தலைவர் , எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற "புலவர் புலமைப் பித்தன் வயது முதிர்வு காரணமாக சிறு காலம் உடல்நிலை சரியில்லமால் இருந்துள்ளார்.இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி 08.09.2021அன்று தனது 85வது வயதில் உயிரிழந்தார்.

இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் புகழேந்தி ,கண்ணகி என்ற ஒரு மகனும்,மகளும் உள்ளனர்.

ALSO READ : உண்மைக்கு மாறாக பேசுகிறார் அமைச்சர்: தங்கர்பச்சான் காட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News