தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

வெப்பச் சலனத்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!!

Last Updated : Jul 31, 2019, 01:26 PM IST
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! title=

வெப்பச் சலனத்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!!

தமிழகத்தின் பரவலான இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து  வானிலை ஆய்வுமைய இயக்குனர் கூறுகையில்; வட மாவட்டங்களில் வெப்பச்சலனம் உருவாகி வருவதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்காலிலும் மழையை எதிர்பார்க்கலாம். 

சென்னையில் வானம் ஓரளவு மேகமுட்டத்துடன் காணப்படும் என்றும்,  மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.  தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மழைக்கு சாதகமான சூழல்  இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

 

Trending News