தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்பதால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்துவருகிறது. இதனையொட்டி 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க | இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் - வரவேற்க காத்திருக்கும் முதலமைச்சர்
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைவரை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கொட்டி தீர்க்கும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?... முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ