தமிழகத்தை தொடர்ந்து கடல் தாண்டி அயல் நாடுகளிலும் தற்போது ரஜினி மக்கள் மன்றம் வலுப்பெற்று வருகிறது!
அரசியல் கட்சி துவங்கி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என ரஜினிகாந்த் அறிவித்த நாள் முதல் அவரது ரசிகர்கள் ரஜினி மக்கள் மன்றத்தினை வலுப்படுத்த துவங்விட்டனர்.
அரசியல் களத்தில் குதிக்க தயாரான ரஜினிகாந்த் முதற்கட்டமாக ரஜினி ரசிகர் மன்றம் என்ற தனது ரசிகர் மன்றத்தினை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று மாற்றினார். இதைத்தொடர்ந்து மன்ற நிரவாகிகள், மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணி, விவசாயிகள் அணி, மீனவர்கள் அணி, இளைஞர் அணி என பல்வேறு அணிகளை உருவாக்கி மக்கள் மன்றத்தைச் சீரமைத்து வலுவான மக்கள் செல்வாக்குள்ள கட்சியாக மாற்றும் முயற்சிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகின்றார்.
தமிழகத்தில் ஓரளவிற்கு கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ள ரஜினி மக்கள் மன்றம் தற்போது கடல் தாண்டி தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜயர்லாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தவும், ரஜினி மன்ற நிர்வாகிகளை நியமிப்பது குறத்தும் அலோசனை நடத்தப்பட்டு வருகின்றது.
இதற்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் வாஷிங்டன், லண்டன்ர அபுதாபி, சார்ஜா மற்றும் அஜ்மன் ஆகிய பகுதிகளில் நடைப்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது லண்டனில் ரஜினி மக்கள் மன்ற கிளை துவங்கப்பட்டுள்ளது. இந்த லண்டன் கிளையின் தொடக்க விழா கடந்த செப்டம்பர் 16-ஆம் நாள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு ஏ.ஜே.ஸ்டாலின் துவக்கி வைத்து சிறப்புரையாற்றியுள்ளார்.
மன்ற கட்டமைப்பு வேலைகள் ஓரளவு முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் விரைவில் தனது கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.