குழந்தையின் உயிரை காப்பாற்றவே கை அகற்றப்பட்டது-ராஜீவ் காந்தி மருத்துவமனை விளக்கம்..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 5, 2023, 01:00 PM IST
  • சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையின் கை அகற்றப்பட்டது.
  • இதன் விசாரணை நடைப்பெற்று வந்தது.
  • இன்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
குழந்தையின் உயிரை காப்பாற்றவே கை அகற்றப்பட்டது-ராஜீவ் காந்தி மருத்துவமனை விளக்கம்..! title=

சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் சர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து இதற்கு விளக்கம் கொடுத்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்:

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையின் கை அழுகியதை அடுத்து, அந்த கை அகற்றப்பட்டது. இதற்கு காரணம் தவறான ட்ரிப்ஸ் மருந்தை குழந்தையின் கையில் செலுத்தியதுதான் என குழந்தையின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் பெற்றொரை அழைத்து விசாரனை நடத்தியது. தற்போது அந்த விசாரனை முடிவுற்றுள்ள நிலையில்  மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண்! குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கான காரணம்:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று இரத் தநாளத்தை பாதித்ததால்  வலது கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு (Arterial Thrombosis) ஏற்பட்டு உயிரை காப்பாற்றும் முயற்சியில் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

குற்றம் சாட்டிய பெற்றோர்கள்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி என்ற பகுதியை சேர்ந்தவர்கள் தஸ்தகீர் - அஜிஸா தம்பதி. இவர்களது மகன், முகமது தஹீருக்கு தற்போது ஒன்றரை வயது. 40 வாரங்களில் பிறக்க இருந்த குழந்தை, 32 வாரங்களிலேயே பிறந்துவிட்டது. இதனால், குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து இந்த குழந்தைக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையிலேயே சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்ததற்கு மூன்று மாதங்களுக்கு பிறகு, குழந்தையின் தலை அளவு அதிகரித்துள்லது. இதனால், கடந்த ஆண்டு மே மாதம் குழந்தையை எழும்பூர் நல மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். குழந்தைக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அவர்கள் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தலையில் இருக்கும் நீரை வெளியேற்றும் வகையில் மருத்துவர்கள் தலையிலிருந்து வயிற்றுக்கு ஒரு குழாயை பொருத்தியுள்ளனர். இதையடுத்து குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் குழந்தைக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

அழுகிய குழந்தையின் கை:

மருத்துவ கண்காணிப்பில் இருந்த குழந்தையின் வலது கை அழுக ஆரம்பித்துள்ளது. குழந்தையின் பெற்றோர், தவறான மருந்தை குழந்தைக்கு செலுத்தியதால்தான் கை அழுகியதாக பெற்றோர் மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம் சுமத்தினர். செவிலியர்கள் அலட்சியமாக ஊசி போட்டதாகவும் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தனர். 

மருத்துவ அறிக்கை:

இன்று வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில் குழந்தையின் கை அழுகியது ஏன் என்பது குறித்தும் குழந்தையின் கையை ஏன் அகற்ற வேண்டி வந்தது என்பது குறித்தும் ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அந்த அறிக்கையில் பின்வரும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

ஆய்வின் முக்கிய குறிப்புகள்:

1. குழந்தை அனுதிக்கப்பட்ட உடனேயே கலதாமதமின்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

2. Venfion ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர்களின் வாக்கு மூலம் மற்றும் மருத்துவர்களின் வாக்கு மூலம் மூலமாக உறுதிசெய்யப்படுகிறது.

3. மருந்து கசிவினால் இரத்தஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.

4. குழந்தையின் வலதுகையில் வலிமற்றும் நிறமாற்றம் ஏற்பட்டபின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதனை செய்து உள்ளனர்.

5. குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophlebitis என்று கணித்து சிகிச்சை அளித்துள்ளார்.

6. இரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை.

7. Pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று இரத்தநாளத்தை பாதித்ததால் இந்த குழந்தைக்கு வலது கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு (Arterial Thrombosis) ஏற்பட்டு உயிரை காப்பாற்றும் முயற்சியில் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இவ்வாறு மருத்துவ அறிக்கையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி வழக்கு! மூன்றாவது நீதிபதி நியமனம்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News