ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தி இயக்குனர் சேரன் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள பிலிம்சேம்பர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் இயக்குனர் சேரன், தயாராப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட 10 க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையில் இயக்குனர் சேரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதிவியேற்று 8 மாத காலம் ஆகியும் இதுவரை கொடுத்த வாக்குறிதிகளை நிறைவேற்றாதவர் விஷால். இந்நிலையில் அரசியலில் நின்று மக்களின் வாழ்வாதாரத்தினை கேள்விகுறியாக ஆக்குவது கண்டிக்கத் தக்கது.
சினிமா எங்கள் வாழ்வாதாரம், எங்கள் வாழ்வாதாரத்தினை அழித்துவரும் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும், அதுவரையில் எங்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.