உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் புதிய மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்படவேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்!
முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரம் என்ன என ஸ்டாலின் கேட்டார். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். வார்டுகள் வரையரை செய்யப்படாததைக் காரணம் காட்டி, தேர்தலை நடத்தாமல் இருக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
முரசொலி நிலம் தொடர்பாக எங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளன. முரசொலி விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் தலையிட உரிமையில்லை. ஸ்டாலினின் வளர்ச்சிப் பிடிக்காமல் இது போன்ற பொய்யான தகவல்களை அளித்து வருகிறார்கள் என ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.