தூத்துக்குடி: சாத்தான்குளம் (Sathankulam) ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில். கொடூரமாக தாக்கியதால், அவர்கள் போலீஸ் காவலில் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
READ | சாத்தான்குளம் கொடூரம்: இதுவரை 4 காவல்துறை அதிகாரிகள் கைது; தொடரும் CBCID விசாரணை
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் (Sathankulam) பகுதியை சேர்ந்த தந்தை மற்றும் மகன் (ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்) இறப்பு வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டது. அந்த வகையில் சாத்தான்குளம் (Sathankulam) தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்காக சிபிசிஐடி (CBCID) பதிவு செய்தது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சஸ்பெண்டில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து சாத்தான்குளம் (Sathankulam) தந்தை மகன் கொலை வழக்கில் சப் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் மற்றும் கான்ஸ்டபிள்கள் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.ஐ. ரகு கணேஷை தொடர்ந்து மேலும் மூன்று பேரை சிபிசிஐடி (CBCID) போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 4 காவல்துறை அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
READ | சாத்தான்குளம் மரணங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ரஜினிகாந்த்
இதையடுத்து சாத்தான்குளம் (Sathankulam) தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து சாத்தான்குளம் (Sathankulam) அருகே அரிவான்மொழியின் உள்ள பெண் காவலர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி தூத்துக்குடி எஸ்.பி. முருகன் கூறியதாவது., மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாங்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளோம். CB-CID இந்த வழக்கை விசாரித்து வருகிறது மற்றும் குற்றவாளிகள் நீதியின் பார்வைக்கு முன் கொண்டு வரப்படுவார்கள். அதன் அடிப்படையில் சாத்தான்குளம் (Sathankulam) வழக்கில் நேரில் கண்ட சாட்சியாக இருக்கும் பெண் காவலருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.