திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய 15 வயதான மகள் அங்குள்ள அரசு உதவி பெறும் பெள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நாள்தோறும் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் மாணவி, படிக்காமல் செல்போனில் மோஜ் பார்த்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை மாணவியின் அண்ணன் தொடர்ந்து கண்டித்தும் வந்துள்ளார்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் இருந்த அந்த மாணவி, அதையே வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் அந்த மாணவி போனில் வீடியோ பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அதை பார்த்த மாணவியின் அண்ணன் சற்று கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை பார்த்த மாணவியின் பெற்றோர் மற்றும் அண்ணன்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போகியுள்ளனர்.
மேலும் படிக்க | பள்ளி மாணவியை கடத்திய டான்ஸ் மாஸ்டர் போக்சோவில் கைது..!
இதனையடுத்து உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஃபோனுக்கு அடிமையாகக்கூடாது, படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் அண்ணன் திட்டியதற்காக தங்கை தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே டிக் டாக் மோகத்தால் ஏராளமான மாணவர்கள் கல்வியை சீரளித்துள்ள நிலையில் தற்போது மோஜ் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மாணவர்கள் அடிமையாகும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் செல்ஃபோன் மூலம் ஆன்லைன் வகுப்புகளை படித்து வந்த நிலையில், இதுபோன்ற விளையாட்டுகளுக்கு மாணவர்கள் எழிதாக அடிமையாகும் சூழல் ஏற்பட்டது. பெற்றோர் மாணவர்களை கண்காணித்து அறிவுரை கூறி பாதுகாக்க வேண்டும் என மாநில அரசு உள்ளிட்ட பல்வேறுதரப்பினர் அறிவுறுத்தி வந்த நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது மற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க | உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR