கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளை விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரிப் பேராசிரியை நிா்மலாதேவி, மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கை விசாரித்து வந்தது ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகளிா் நீதிமன்றம். தீர்ப்பு இன்று வெளியாவதை முன்னிட்டு, நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
மேலும் படிக்க | 10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியர் நிர்மலாதேவியை கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர் சிபிசிஐடி போலீசார். இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் 11 மாத சிறைவாசத்திற்கு பின் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்துள்ள உதவிப் பேராசிரியர் முருகன் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதான வழக்கு விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் வகையில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 100 மேற்பட்ட சாட்சிகள் விசாரணை மற்றும் இருதரப்பு வாதங்கள், விசாரணை நிறைவு பெற்றது.
இந்த வழக்கில் பலர்மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும்தான் குற்றவாளிகள் என இறுதி செய்து 1360 குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. 3 பேருக்கும் எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபசார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. பின்பு கொரோனா ஊரடங்கால் விசாரணை தாமாதமானது. அனைத்துச் சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த வழக்கு தொடா்பாக அனைத்து சாட்சிகளிடமும் விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ