ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட கோரி தமிழக-கேரள சாலையில் மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதால் 2 மணி நேரமாக இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடத்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக 2 காட்டு யானைகள் முகாமிட்டு இருக்கின்றன. நகர்ப் பகுதிக்குள் சுற்றித்திரியும் இந்த யானைகள் வீடுகளை இடித்து சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
ALSO READ ஏழாண்டுகளாக ஏமாற்றி வந்த மோசடி மன்னன் கைது
அதேபோல் இந்த யானைகளால் ஏராளமான விவசாய பயிர்களும் சேதம் அடைந்து இருக்கின்றன. தொடர்ச்சியாக காட்டு யானைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பகுதி மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் பாடந்துறை பகுதிக்கு வந்த ஊர்மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழக-கேரள சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்திய மக்களோடு காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட வன அலுவலர் சம்பவ பகுதிக்கு வந்து காட்டு யானைகளை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனையடுத்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்கரன் போராட்டம் நடத்திய மக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டுவதற்கு உடனடியாக கும்கி யானைகள் வரவழைக்கப்படும், காட்டு யானைகள் வரக்கூடிய பகுதிகளில் அகழி மற்றும் சோலார் மின் வேலிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக தமிழகம் மற்றும் கேரளா இடையே சுமார் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ALSO READ மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கண்டனம்: வாகனங்களுடன் முற்றுகைப் போராட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR