அதிகாரிகளுக்கு பாடம் எடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ்! வைரலாகும் வீடியோ

Minister Mano Thangaraj Viral Vido: ஒரு கோடி ரூபாய்க்கு இந்த வேலை தேவையா? அதிகாரிகளை சரமாரியாக டோஸ் விட்ட அமைச்சர் மனோ தங்கராஜின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 29, 2023, 11:08 AM IST
  • வைரலாகும் அமைச்சர் மனோ தங்கராஜ் ‘டோஸ்’ வீடியோ
  • ஒரு கோடி ரூபாய்க்கு இந்த வேலை தேவையா?
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் அமைச்சரின் திட்டு
அதிகாரிகளுக்கு பாடம் எடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ்! வைரலாகும் வீடியோ title=

அமைச்சரின் வைரல் வீடியோ: அழகியபாண்டிபுரம் கடுக்கரை செல்லும் சாலை பகுதியில் அமைந்துள்ள கீரங்குளத்தில் நேற்று மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் சீரமைப்பு பணிகளை தொடங்கி வைப்பதாக இருந்தது. நிகழ்விற்கு வருகை தந்த அமைச்சர் அவர்கள் குளத்தை பார்த்து அதன் கரைகளை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பல வருடங்களாக மிகவும் கெட்டியாக இருக்கும் கரையை உடைத்தால் அதன் உறுதி தன்மை போய் விடும், கடும் மழை நேரங்களில் கரையை மிக எளிதாக உடைத்து தண்ணீர் ஊருக்குள் அல்லது சாலையில் வந்து விடும். ஒரு மோட்டாரை வைத்து தண்ணீரை வெளியேற்றி இருக்கலாமே என்று அதிகாரிகளை பார்த்து கடுமையாக கேள்வி கேட்டார் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

கீரங்குளம் குளத்தை சுற்றி ஒரு கோடி ரூபாய் செலவில் நடைபாதை அமைக்கப்படுவதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். கீரங்குளம் அமைந்திருப்பது ஒரு சிறிய கிராமம், கிராமத்தில் பல வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டிது உள்ள நிலையில், இது தேவை இல்லாத ஒரு வேலை எதற்கு என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கடிந்துக் கொண்டார்.

இது கிராமம், நகரம் அல்ல, நடைப்பதை அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்று சராமாரியாக கேள்வி எழுப்பிய தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்,  கிராம மக்கள் நடந்து போக இடம் இல்லையா? என்று கடிந்துக் கொண்டார்.

மேலும் படிக்க | Mutton Biryani: திண்டுக்கல் பள்ளிவாசலில் 20 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி விநியோகம்

இந்த நிதியை பயன்படுத்தி வேறு ஏதாவது வளர்ச்சி பணிகள் செய்திருக்கலாமே என்று அதிகாரிகளை கடுமையாக திட்டிய அமைச்சர் மனோ தங்கராஜின் வீடியோ சமூக தளங்களில் வைரலாகிறது.

பெரும் நகரங்களில் இருப்பதை போன்று கிராமத்தில் இவ்வாறு அமைக்க வேண்டிய அவசியம் என்ன? பெரும் நகரங்கள் மற்றும் நகரங்களில் இருப்பவர்கள் விரும்புவது போன்று கிராமவாசிகள் இதனை விரும்ப மாட்டார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், குளம் என்பது அதன் வடிவமைப்பிலே இருந்தால் தான் நன்றாக இருக்கும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அதனையே தான் விரும்புவார்கள் என்ற கண்ணோட்டத்தில் அதிகாரிகளை கண்டித்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் டோஸ் விட்டுள்ளார்.

மேலும் மீண்டும் குளத்திற்கு வருகை தருவேன், குளத்தின் அளவு ஒரு இன்ச் கூட குறைய கூடாது என்று அதிகாரிகளை எச்சரிக்கை செய்தார்.  இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

மேலும் படிக்க | பகையாளியா பங்காளியா? குஸ்தி போடும் சிங்கங்களின் மூர்க்கச்சண்டை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News