தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு: மத்திய சுகாதார அமைச்சகம்

தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உள்ள நிலையிலும், தமிழகத்திற்கு எற்பட்டிருக்கும் இந்த நிலை அதிர்ச்சியை அளித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 19, 2021, 03:19 PM IST
  • தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  • தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 33,059 பெருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று 364 பேர் தமிழகத்தில் இறந்தனர்.
தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு: மத்திய சுகாதார அமைச்சகம்   title=

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. இதன் விரியமும் பரவும் வேகமும் நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றன. பல மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது. 

தமிழகத்திலும் தொற்றின் அளவு கட்டுக்கடங்காமல் உள்ளது. நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை அடுத்தடுத்து எடுத்து வருகிறது. தொற்று எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர ஏற்கனவே மே 10 முதல் மே 24 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
 
ஊரடங்கு (Lockdown) உள்ள போதிலும், தற்போது மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உள்ள நிலையிலும், தமிழகத்திற்கு எற்பட்டிருக்கும் இந்த நிலை அதிர்ச்சியை அளித்துள்ளது. ஊரடங்கு ஒரு புரம் இருக்க அரசாங்கம் நாளுக்கு நாள் புதிதாக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

இருப்பினும், தொற்றின் தீவிரமும் வேகமும் அதிகமாக இருப்பதால், இதை கட்டுக்குள் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த இரு வாரங்களில் கொரோனா (Coronavirus) 2-வது அலை உச்சத்தை எட்டக்கூடும் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ALSO READ: COVID Update: இன்று தமிழகத்தில் கொரோனாவால் 364 பேர் உயிரிழப்பு, 33,059 பேர் பாதிப்பு

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்:

- தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 33,059 பெருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.

- நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில் 10 மாநிலங்களில் மட்டும் 74% தொற்று பதிவாகிய்யுள்ளது. 

- கேரளாவில் நேற்று ஒரே நாளில் 31,337 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர்.   

செவ்வாயன்று தமிழ்நாட்டில் (Tamil Nadu) 33,059 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,64,350 ஐ எட்டியுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,31,596 ஆக உள்ளது என மாநில சுகாதார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று 364 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,369 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. செவ்வாயன்று 21,362 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். 

ALSO READ:முதல்வர் ஸ்டாலின் அதிரடி: கொரோனா தடுப்பூசி, மருந்துகள், ஆக்சிஜன் அனைத்தும் தமிழகத்திலேயே உற்பத்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News