வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்

Satya Pratha Chagu: தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 19, 2024, 06:44 PM IST
  • வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் ஏன்?
  • தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
  • மாநிலம் முழுவதும் 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு
வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம் title=

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு சென்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு, அவர்கள் வரிசையாக நின்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சில இடங்களில் அரசியல் கட்சியினரிடையே மோதல் இருந்த நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் பெயர்கள் காரணம் இன்றி நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் 830 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | தேர்தல் களேபரம்! பாஜக - விசிக மோதல், அதிமுக - திமுக மோதல்.... காவல்துறை குவிப்பு

சத்யபிரதா சாகு விளக்கம்

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னையில் விளக்கம் அளித்தார். 5 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை வெளியிட்டபோது வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் குறித்து பேசினார். அவர் பேசும்போது, " தமிழகம் முழுவதும் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. அதிகப்படியாக தருமபுரியில் 67.52% வாக்குகளும், நாமக்கல் தொகுதியில் 67.37% வாக்குகளும் பதிவாகியுள்ளது. 67.34% வாக்குகள் ஆரணி தொகுதியில் பதிவாகி உள்ளது. வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது என்பது ஒவ்வொருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட காரணங்களினால் அவர்கள் பெயர்கள்  நீக்கப்பட்டிருக்கலாம்.

அண்ணாமலை புகாருக்கு பதில்

செப்டம்பர் முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை சரிபார்த்தல் சேர்த்தல், நீக்கல் செய்துள்ளோம். அப்போதே சரி பார்த்துக்கொண்டிருந்தால் கடைசி நேரத்தில் அவர்களுக்கு இது போன்ற நிலை வராது என சத்தியபிரதா சாகு தெரிவித்தார். மத்திய சென்னை நாம் தமிழர் வேட்பாளர் கைது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், 49MA படி வாக்குச்சாவடி அலுவலரிடம் கோரிக்கை வைக்கலாம் எனவும், அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் ஆணையத்தின் மீது வைத்துள்ள புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சத்யபிரதா சாகு, அது குறித்து அங்குள்ள அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கோவை: 830 ஓட்டுகள் காணவில்லை, மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News