திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை முதலாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு, 27.7.2018 முதல் தண்ணீர் திறந்து விடப்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!

Last Updated : Jul 20, 2018, 05:26 PM IST
திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு! title=

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை முதலாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு, 27.7.2018 முதல் தண்ணீர் திறந்து விடப்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!

இதுகுறித்து அரசு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது...

"திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை முதாமா மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை முதலாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தற்போதை நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து உரிய இடைவெளி விட்டு 27.7.2018 முதல் ஒரு சுற்றுக்கு மொத்தம் 1900 மி.க அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்துவிட ஆணையிடப்படுகிறது.

இதன்மூலம், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவித்துள்ளார்!

Trending News