Thanjavur Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஊர், தஞ்சாவூர். தமிழ்நாட்டின் பண்பாட்டையு, தமிழர்களின் மரபுகளையும் தாங்கி நிற்கும் ஊர்களுள் ஒன்று இந்த ஊரில். முத்தமிழ் மட்டுமன்றி, தமிழர்களின் தொன்மையான கலைஞர்களுக்கும் பெருமை உண்டு.
ஆதிக்கம் செலுத்தும் திமுக:
தமிழக மக்களவை தொகுதிகளுள், 30வது தொகுதியான தஞ்சாவூரில், மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகியவை அந்த தொகுதிகள் ஆகும். இதில், மன்னார்குடி மட்டும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தொகுதியாக இருக்கிறது. இதுவரை நடந்துள்ள தேர்தல்களின் நிலவரப்படி, திமுக கட்சிகளே இதில் அதிக ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.
2019 தஞ்சாவூர் மக்களவை தேர்தல் முடிவுகள்:
2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அவர்களுடன் போட்டியிட்டவர்களின் விவரம்:-
>எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் - திமுக கட்சி-5,88,978 வாக்குகள்
>நடராஜன் - தமிழ் மாநில காங்கிரஸ் - 2,20,849 வாக்குகள்
>முருகேசன் - சுயேட்சை வேட்பாளர்- 1,02,871 வாக்குகள்
>மருதராஜா - நாம் தமிழர் கட்சி -57,924 வாக்குகள்
>சம்பத் ராமதாஸ் - மக்கள் நீதி மையம் - 23,477 வாக்குகள்
2024 போட்டியிட்டவர்களின் விவரம்:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூரில் போட்டியிட்டவர்களின் விவரம்:-
>முரசொலி-திமுக கட்சி
>சிவனேசன்-தே.மு.தி.க
>கருப்பு முருகானந்தம்-பாஜக கட்சி
>ஹூமாயூன் கபிர்-நாம் தமிழர் கட்சி
மேலும் படிக்க | உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைப்பெற்றது. இதில், தஞ்சாவூர் தொகுதியில் மொத்தம் 68.27 % சதவிகித வாக்குகள் பதிவாகின. சில நாட்களுக்கு முன்னர், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இவை, தஞ்சாவூர் தொகுதியில் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கின்றன. எனவே, தஞ்சாவூரில் திமுக+INDIA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என கூறப்படுகிறது.
தஞ்சாவூரில் திமுக வெற்றி பெற்ற வருடங்கள்:
தஞ்சாவூர் தொகுதியில், 2019ஆம் ஆண்டு மட்டுமன்றி பல முறை வெற்றிக்கனியை சுவைத்திருக்கிறது.
>2019ஆம் ஆண்டு-திமுக கட்சியை சேர்ந்த எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், 5,88,978 வாக்குகளை பெற்றிருந்தார். 2009ஆம் ஆண்டிலும் போட்டியிட்ட இவர், 4,08,343 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து இதே வேட்பாளரே 2004ஆம் ஆண்டிலும் 4,00,986 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
>1999ஆம் ஆண்டும் பழநிமாணிக்கம் 2,95,191 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். 1998, 1996 ஆகிய ஆண்டுகளும் வெற்றி இவருடையதுதான்.
எனவே, தஞ்சாவூர் தொகுதியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ