புது டெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் வர உள்ளதால், சில கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் போட்டியிடும் எட்டு கட்சிகளுக்கும், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஒரு சின்னமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் (TN Assembly Election 2021) நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரத்தை பல கட்சிகள் தொடங்கி உள்ளன. தேர்தல் கூட்டஞ்சி குறித்தும், தங்கள் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்தும் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த இரண்டு முறை நடைபெற்ற தேர்தலில் அதிமுக (AIADMK) வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஒன்பது கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் குறித்து விவரங்களை தெரிவித்துள்ளது. அதில், நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டு கட்சிகளுக்கும் தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுச்சேரியில் (Puducherry) ஒரே சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சிக்கு புதுச்சேரியில் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. அது எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
சின்னம் விவரங்கள்:
தமிழ்நாடு இளைஞர் கட்சி (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) - மோதிரம்.
அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் (தமிழ்நாடு) - மின் கம்பம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) - பிரஷர் குக்கர்
எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி (தமிழ்நாடு) - பேட்டரி டார்ச்
சாமானிய மக்கள் நல கட்சி (தமிழ்நாடு) - கைத்தடி
ALSO READ | தமிழகத்தில் தொடரும் பாஜக அதிரடிகள்... தாமரை மலர்ந்தே தீருமா..!!
தேசியவாத திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (மேற்கு வங்கம்) - ஆப்பிள்
நாம் தமிழர் கட்சி (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) - விவசாயி சின்னம்
மக்கல் சேவை கட்சி (தமிழ்நாடு) - ஆட்டோ ரிக்ஷா
மக்கள் நீதி மய்யம் (புதுச்சேரி) - பேட்டரி டார்ச்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR