தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்தனர்.
முதல்வர் பயணம்:
விழுப்புரத்தில் கள்ளச்சாரயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை இன்று 10ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வருடன் அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ.வேலு ஆகியோரும் பயணம் செய்கின்றனர். இந்த விவகாரத்தில் 2 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 2 துணை காவல் ஆய்வாலர்கள் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, டி.ஜி.பி சைலேந்திர பாபு தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் படிக்க | மூதாட்டி கொலை: மருமகள் உள்பட 5 பேர் கைது
விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்திற்கு பலி:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்தது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் குடித்துள்ளனர். உடனே அதனை உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் புதுவை மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். இதையடத்து, அவர்கள் குடித்திருந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்தது. அனுமதிக்கப்பட்டவர்களில் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மதுராந்தகம் பகுதியிலும் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் கடந்த 3 நாட்களில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இன்று கள்ளச்சாராயத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நிவாரண நிதியளிக்க முடிவு
இன்று விழுப்புரத்திற்கு சென்றுள்ள முதல்வர், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மீண்டும் தலைத்தூக்கிய கள்ளச்சாராயம் - இபிஎஸ் குற்றச்சாட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ