அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை நடத்திவரும் பன்னீர்செல்வம் இல்லம் பரபரப்புடன் இருக்கிறது. அங்கு அவருடன் அவசர ஆலோசனை நடத்த நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா அணி, ஓபிஸ் அணி என்று அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிக்கல் ஏற்பட்டபோதெல்லாம் இடைக்கால முதல்வராக பொறுப்பேற்றவர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே.
1951-ம் ஆண்டு, ஜனவரி14-ம் தேதி, பெரியகுளத்தில் பிறந்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். இவர் பி.ஏ முடித்தபின்னர் தான் அரசியலுக்கு வந்தார்.
1969ல் திமுகவில் இணைந்த பன்னீர்செல்வம், 1973ல் அதிமுக துவங்கியதும் அக்கட்சியில் சேர்ந்தார். 1996ல் பெரியகுளம் நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று தனது பொதுவாழ்வை துவக்கினார்.
2001ல் எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரானர். முதல் முறையாக ஆறுமாதம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பிறகு 2014 மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சைக்கு சேர்ந்தபின், இடைக்கால முதல்வராக நியமிக்கப்பட்டார்.ஜெயலலிதாவின் மறைவைத்தொடர்ந்து டிசம்பர்.6, 2016ல் தமிழக முதல்வரானார்.
சசிகலா தரப்பு நெருக்கடியை தொடர்ந்து 2017, பிப்ரவி 6ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்களுடன் தனி அணி உருவாக்கினார். சசிகலா குடும்பம் இல்லாத அதிமுக தான் எங்கள் இலக்கு என கூறினார்.
தற்போது சசிகலா பெங்களூரில் சிறை கைதியாக உள்ளார். டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்ட்டார். அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கொஞ்சம் பொருந்திருந்து பார்ப்போம்.!