தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன் அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
10-10-21: இன்று வானிலை ஆய்வு மையம் (Meteorological Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Mega vaccination camp: தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம்
11-10-21: நாளை கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
12-10-21: நாளை மறு நாள், அதாவது வரும்12ம் தேதி கோயம்புத்தூர், ஈரோடு ,சேலம், நீலகிரி, தருமபுரி, விழுப்புரம் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
13-10-21 & 14-10-21: வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | COVID-19 Update: அக்டோபர் 09; தமிழகத்தின் இன்றைய கோவிட் பாதிப்பு