ரெட் ஹில்ஸ் பாடிய நல்லூர் பாலகணேசன் நகர் 4 -வது தேர்வில் வசித்து வருபவர் அஜித் (27). இவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது. சுகன்யான இப்போது கர்ப்பிணியாக இருந்துள்ளார். முதல் 5 மாதம் புழல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தொடர் பரிசோதனை பார்த்து வந்துள்ளனர். பின்னர் சென்னை தி.நகரில் உள்ள WCF மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இன்ஸ்டாகிராமில் சமூக வலைத்தள பக்கத்தில் பிரசவத்தின்போது பெண்ணின் கணவர் உடன் இருந்து பிரசவத்தை பார்த்து கொள்ளலாம் என வந்த விளம்பர பதிவுகளை பார்த்து அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அஜித் அவரது மனைவி சுகன்யாவை கடந்த நான்கு மாதமாக சென்னை தி.நகரில் உள்ள WCF மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்துள்ளார். பின்னர் அங்கேயே பிரசவம் பார்க்கவும் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி அஜித்தின் மனைவி சுகன்யாவிற்கு பிரசவ வலி ஏற்படவே அன்று மதியம் தி.நகரில் உள்ள WCF மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவ மனையில் பிரசவத்திற்காக மருத்துவ சிகிச்சைகள் அளித்துள்ளனர். அப்பொழுது சில மருத்துவ ஊசிகள் செலுத்தப்பட்ட நிலையில் திடீரென சுகன்யாவிற்கு தொடர்ச்சியாக வலிப்பு வந்துள்ளது.
மேலும் படிக்க | புதைக்கப்பட்ட மண்டை ஓடு, உடல் உறுப்புகள்! ஓரினச்சேர்க்கை வெறியால் நடந்த கொலை?
இதில் சுகன்யா மயக்கம் அடைந்திருக்கிறார். அப்படியே அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்து, ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சுகன்யா சுயநினைவு இன்றி இருந்ததால் நிலமையை குறித்து தற்பொழுது எதுவும் கூற முடியாது வேறு மருத்துவமனை கொண்டு சென்று பார்க்கும்படி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே உறவினர்கள் மற்றும் அவரது கணவர் அஜித் வேறு வழியின்றி மனைவியின் உயிரை காப்பாற்ற WCF மருத்துவர்கள் பரிந்துரை செய்த சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சுயநினைவு இன்றி இருந்த சுகன்யாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுகன்யா பரிதாபமாக உயிரிழந்தார். சுகன்யாவிற்கு பிறந்த ஆண் குழந்தையும் உடல் நிலை கவலை அளிக்கும் வகையில் இங்குபெட்டர் பெட்டியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து WCF மருத்துவமனையில் முறையான மருத்துவம் பார்க்காமல் தவறான மருத்துவம் பார்த்தது தான் சுகன்யாவின் உயிர் பரிதாபமாக போனதிற்கு காரணம் என அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சென்னை தி.நகரில் உள்ள WCF மருத்துவமனையை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுகன்யாவின் உறவினர்களை அழைத்து மருத்துவமனை தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்படாத உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுனர். திடீரென பெண்ணின் கணவர் அஜித் சாலையின் வழியே வந்த லாரியின் முன்பு திடீரென பாய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுகன்யாவின் கணவர் அஜித் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தனது மனைவி உயிரிழந்ததாகவும் எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து ஒருவழியாக நீண்ட நேரத்துக்குப் பிறகு சுகன்யாவின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் படிக்க | தமிழ்நாடு சொத்துப் பதிவு: புதிய முத்திரை கட்டண விதிமுறைகள் டிசம்பர் 1 முதல் அமல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ