அமமுக கட்சி தொண்டர்களும் வி.கெ.சசிகலாவின் அபிமானிகளும் காத்திருந்த தருணம் இன்று வந்துவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் சிறை தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த சசிகலா இன்று விடுதலை ஆகிவிட்டார். இதை ஆமமுக-வினர் கொண்டாடி வருகிறார்கள்.
சசிகலா விடுதலை செய்யப்படுள்ள நிலையில், அவரது உடல்நிலையின் சமீபத்திய தகவல்களைப் பெற அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “சின்னம்மா அதிகாரபூர்வமாக விடுதலைச் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு (Tamil Nadu) மக்களுக்கும் தெரிவிக்கிறேன். மருத்துவர்களைச் சந்தித்து, எப்போது அழைத்துச் செல்லலாம் என்று ஆலோசிக்க உள்ளோம். ஓய்வுத் தேவைப்படும்பட்சத்தில், பெங்களூருவிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்வது பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தப் பின்னரே சொல்ல முடியும்.” என்று கூறினார்.
சசிகலாவின் விடுதலை தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை மாறுமா? என கேட்டதற்கு.. "பொறுத்திருந்து பாருங்கள்" என்று பளிச் என பதில் அளித்த அமமுக கட்சியின் நிறுவனர் டி.டி.வி தினகரன்.https://t.co/ZhOCunOZbq | #ZeeHindustanTamil | #TTVDhinakaran | #AMMK | #Sasikala | #TamilNadu | pic.twitter.com/JIyobSDC0n
— ZEE Hindustan Tamil (@ZHindustanTamil) January 27, 2021
ALSO READ: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா!
இன்று சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதை திறந்து வைத்தார். இதைப் பற்றி பேசிய தினகரன், “சசிகலா விடுதலையாகும் நாளில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்க்கும்போது, சசிகலாவின் விடுதலையை அ.தி.மு.க-வினர் சென்னையிலிருந்தபடியே கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்றார்.
அதிமுக-வும் அமமக-வும் இணைய வாய்ப்புள்ளதா? இணைந்தால் அதிமுக-வுக்கு சசிகலா (Sasikala) தலைமை ஏற்பாரா என அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தினகரன் மறுத்து விட்டார். “இந்த நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. சித்தி விடுதலையான மகிழ்ச்சியில் இருக்கிறோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே அ.தி.மு.க-வை மீட்டெடுத்து அம்மாவின் உண்மையான ஆட்சியைக் கொடுக்கத்தான்” என்று மட்டும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், சசிகலாவின் விடுதலை தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவுக்கு அதிமுக-வில் இடமில்லை என சில நாட்களுக்கு முன்னர் பழனிசாமி கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனினும், அரசியலில் எதுவும் நிலையானது அல்ல என்பது உண்மையே!!
ALSO READ: சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR