காஞ்சிபுரம் கோயில் அருகே மர்மபொருள் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் நேற்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்த விபத்தில் இருவர் பலி, 5 பேர் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் கங்கை அம்மன் கோவில் குளத்தை தூர்வாரும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் அதனை தூர்வாரும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தூர் வாரும் பணி நடந்து கொண்டிருக்கும் அந்த பகுதியில் சென்று மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர். அப்போது குப்பைகள் அனைத்தும் முழுமையாக தூர்வாரபட்டிருந்ததால் அந்தப் பகுதியில் ஒரு மரப்பெட்டி ஒன்றை அவர்கள் கண்டுள்ளனர்.
அந்த மர பெட்டியை எடுத்து கோவிலின் கரை பகுதியில் அமர்ந்து பெட்டியை திறக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த பெட்டி வெடித்து சிதறியது. அதிலிருந்து பால்ரஸ்கள் முக்கியமான சில இரும்பு துகள்கள் போன்றவை அருகிலிருந்த கோயில் சுவற்றின் மீதுபட்டு கோவில் சுவர்களை சேதப்படுத்தியது. இந்த வெடி விபத்தில் சிக்கி 5 நபர்களில் இருவர் சகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.