'விஜய் உடன் ஒரே மேடையில்...' வந்து விழுந்த கேள்வி - திருமா சொன்ன பதில் என்ன?

Thirumavalavan Latest Updates: ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்துள்ள புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்ள உள்ள நிலையில், அதுகுறித்து திருமாவளவன் இன்று கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 5, 2024, 01:33 PM IST
  • நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் - திருமாவளவன்
  • புத்தக வெளியீடு குறித்து ஓராண்டு முன்னர் இசைவு தெரிவித்தேன் - திருமாவளவன்
  • 40 பேருடைய கட்டுரையின் தொகுப்புகள்தான் 'எல்லோருக்கும் அம்பேத்கர்' - திருமா
'விஜய் உடன் ஒரே மேடையில்...' வந்து விழுந்த கேள்வி - திருமா சொன்ன பதில் என்ன? title=

Thirumavalavan Vijay Book Release Latest Updates: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு இன்று (நவ. 5) வருகை தந்தார். பின்னர் தரை மார்க்கமாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலை கடை திறப்பு விழா மற்றும் பள்ளிக்கூட அறைகள் திறப்பு விழாக்களிலும் கலந்து கொள்ள உள்ளார்.

முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,"பஞ்சமி நிலம் தொடர்பாக பிரச்சனை இருக்கிறது. கலைஞர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு மீண்டும் இயங்க வேண்டும் என்பது தெரிவித்துள்ளோம். அது குறித்து இந்த நிலைப்பாடு எடுக்கவில்லை.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர் நியமிக்க முடிவு எடுத்துள்ளேன். ஏற்கனவே 144 மாவட்ட செயலாளர் நியமித்து ஓராண்டு கடந்திருக்கிறது.
கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நுண்ணிய அளவில் வரைமுறை செய்து ஏராளமான பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்" என்றார்.

சீமானுக்கு திருமா பதில்

நடிகர் விஜய் பங்கேற்கும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதன் மூலம், திருமாவளவன் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார் என்று சீமான் கூறியிருக்கிறாரா? என்ற கேள்விக்கு, "இதற்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?.

மேலும் படிக்க | தெலுங்கு இனத்தை நான் குறிப்பிட்டு சொல்லவில்லை... நடிகை கஸ்தூரி திடீர் விளக்கம்!

கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே நாங்கள் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் இருந்து வருகிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம். இரண்டு கூட்டணிகளை  உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு பங்கு உண்டு. நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும், முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய கவனம் இருக்கிறது.

கூட்டணி தொடரும்...

இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. ஏற்கனவே பலமுறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன். திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சில ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மையை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். 

இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மதசார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி. இந்தியா கூட்டணியை கட்சிகள் உருவாக்கியது, அதில் எனக்கு பங்கு உண்டு. எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறிக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு இல்லை.2024 நடைபெறும் சட்டமன்றத் தொகுதியில் கூட்டணி தொடரும்" என பதிலளித்தார்.

புத்தக வெளியீட்டு விழா...

மேலும் பேசிய திருமாவளவன்,"புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க இசைவு தெரிவித்து ஓராண்டு ஆகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் வெளியிட திட்டமிட்டிருந்தது. விகடன், ஆதவ் அர்ஜுனா இரு தரப்பும் இணைந்து இந்த புத்தகத்தை கொண்டு வருகிறார்கள். ராகுல் காந்தியையும் அழைப்பதாக திட்டமிட்டு இருந்தனர். 40 பேருடைய கட்டுரையின் தொகுப்புகள்தான் 'எல்லோருக்கும் அம்பேத்கர்' என்ற தலைப்பு உள்ளது. 

இப்போது சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்தையும் அழைக்கலாம் என தகவல் சொன்னார்கள். தவெக மாநாடுக்கு முன்பாக விஜய்யையும் அழைக்கலாம் என தெரிவித்திருந்தனர், அதற்கும் நான் இசைவு தெரிவித்திருந்தேன். தற்போதைய அரசியல் சூழலில் அந்த நிகழ்வில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.

திராவிடம் என்றால் என்ன? - திருமாவளவன்

திராவிடத்தைப் பற்றி நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு,"திராவிடத்தைப் பற்றி ஏற்கனவே கருத்து சொல்லி உள்ளேன். திராவிடர் என்பது தமிழக அரசியல் என்பது பல பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இது தவறு திராவிடத்தால் வீழ்ந்தோம் என சொல்வதை விட வாழ்ந்தோம், வரலாற்றுப் படைத்தோம் என்பதுதான் முக்கியமான அரசியல். சாதியம்தான் நம்மளை பிளவுபடுத்தி பிடித்துள்ளது, வீழ்த்தியுள்ளது. 

அதனை எதிர்க்க வேண்டும் என்றால் ஆரியத்தை எதிர்க்க வேண்டும். அதில் இருந்து முற்றாக மாற்றம் செய்ய வேண்டும். 
திராவிடம் என்பது கருத்தியல் நிலைப்பரப்பை குறிப்பது அல்ல. அது ஒற்றை மொழி அல்ல, தேசிய இனம் என்று சொல்ல முடியாது, நிலமாகவும் இல்லை. கற்பனை செய்து கொண்டு அதன் நிலப்பரப்பு எல்லை என்று சொல்வது கற்பனை வாதம். திராவிடம் என்பது கருத்துகள் சாதியத்திற்கு எதிராக பேசிய அரசியல். 

பெரியாருக்கு முன்னதாகவே இந்த தமிழ் மண்ணில் திராவிடம் குறித்து பேசப்பட்டுள்ளது. சைவ எழுச்சி எழுந்த போது ஆரிய எதிர்ப்பு உண்டானது. அப்போது திராவிடர் என்று சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திராவிடம் என்ற கருத்தியல் இல்லை என்றால் சனாதன நம்மளை விழுங்கி இருக்கும், ஹிந்தி தமிழை விழுங்கி இருக்கும். திராவிட பெரியாரிய கருத்தியல் இல்லாமல் இருந்தால் சமஸ்கிருதம் தமிழை விழுங்கி இருக்கும். தமிழர் இனம் இருக்கிறோம் என்றால் அதன் பாதுகாப்புக்கு காரணம் திராவிட கருத்தியல் தான்" என்றார். 

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாக அதிகரிக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News