விழுப்புரம் : பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - 10 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 30, 2022, 08:33 PM IST
  • பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை
  • 10 பேர் மீது வழக்குப் பதிவு - 3 பேர் கைது
  • தலைமறைவாக உள்ள 7 பேருக்கு வலைவீச்சு
 விழுப்புரம் : பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - 10 பேர் மீது வழக்குப்பதிவு  title=

விழுப்புரம் அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, அதே பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பறையில் சுட்டித்தனமாக இருக்கும் சிறுமி அன்று மிகவும் சோகமான மனநிலையோடு சோர்வாக இருந்திருக்கிறார். இதனைக் கண்ட அந்த பள்ளியின் ஆசிரியை மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஆசிரியையிடம் கூறியுள்ளார்.

sexual harassment case

அதில் அதிர்ச்சியடைந்த ஆசிரியை இந்த சம்பவம் குறித்து சைல்டு லைனுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே மாணவியிடன் சைல்டு லைன் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அதில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் வெளிவந்தன.

Sexual harassment

மேலும் படிக்க | நாகை : கல்வி கட்டணத்திற்காக காவு வாங்கப்பட்ட மாணவியின் உயிர் ?

மேல் கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், செ.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் 17வயதான மைனர் உள்ளிட்ட 10 பேர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சசிகுமார், மணிகண்டன், 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியிடன் அத்துமீறி 7 பேரை தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க | ஐஐடி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு! ஜாமீனில் வந்த முன்னாள் மாணவர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News