சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் திருக்குறள் களஞ்சியம் என்னும் நூலினை வெளியிட்டார்!
சென்னை ராஜ்பவனில் கலைமகள் ஆசிரியரும் திருக்குறள் களஞ்சியம் நூல் தொகுப்பாளருமான கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் நூலினை பெற்றுக்கொள்ள தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் நூலினை வெளியிட்டார்.
விழாவில் பேசிய அவர் தெரவிக்கையில்..
"திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பல அறிஞர் பெருமக்களின் கருத்துரைகளின் தொகுப்பாக விளங்குகிறது என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் ஆளுநர் தனது உரையில் திருக்குறள் உலக பொதுமறை. திருக்குறளில் இல்லாதது எதுவுமே இல்லை. ஒருவர் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமானால் திருக்குறளை அவசியம் படிக்க வேண்டும். நான்கு வேதங்கள், பகவத் கீதை இவற்றில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதே கருத்துக்கள் திருக்குறளிலும் வலியுறுத்தப்படுகின்றன.
இனம், மதம் கடயது நிற்கும் நூல் திருக்குறள். திருக்குறளைப் படிப்பவர்களின் மனதில் தீய எண்ணங்கள் புகாது. அன்பைப் பரவச் செய்யும். வள்ளுவம் வாழ்க்கை நெறிமுறை, நிர்வாகத்தில் இருப்பவர்கள் முதல் நீதிமான்கள் உள்பட ஆட்சியாளர்கள் வரை எப்படி செயல்பட வேண்டும் என்பதை சொல்கிற நூல் திருக்குறள் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். திருக்குறள் களஞ்சியம் என்னும் இந்த நூலில் பல அறிஞர்களின் உரை, முன்னுரை தொகுக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் உரையும் உள்ளது. இளைஞர்கள், திருக்குறள் ஆய்வாளர்கள் படிக்க ஏற்ற நூல்" என தெரிவித்தார்!