பாகிஸ்தானை விட இந்தியாவில் மோசம் -அதிர்ச்சி ரிப்போர்ட்

4-ஜி இணைப்புகள் வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 86.26 சதவிகித பங்களிப்புடன் 14-வது இடத்தில் உள்ளது.

Last Updated : Feb 28, 2018, 02:45 PM IST
பாகிஸ்தானை விட இந்தியாவில் மோசம் -அதிர்ச்சி ரிப்போர்ட் title=

இந்தியாவில் 4ஜி நெட்வேர்கின் வேகம் அதிகமாக உள்ளது என்று டெலிகாம் சேவை நிறுவனங்கள் விளம்பரம் செய்து வந்தாலும், அது உண்மை இல்லை என்பதை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான், கஜகஸ்தான், துனீசியா, அல்ஜீரியா, இலங்கை ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா 4ஜி நெட்வேர்கின் வேகம் பின்தங்கி உள்ளது என்பது தான் உண்மை.

ஓபன் சிக்னல் என்ற நிறுவனம், ஆறு கண்டங்களில் உள்ள 88 நாடுகளின் 4-ஜி சேவையை ஆய்வுக்குட்படுத்தியது. இதில் சிங்கப்பூர் 44.31 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 42.12 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் நெதர்லாந்து உள்ளது. 

நார்வே, 41,20 எம்.பி.பி.எஸ் வேகத்துடனும், தென் கொரியா 40.20 எம்.பி.பி.எஸ் வேகத்துடனும், ஹெங்கேரியில் 39.18 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் 4-ஜி சேவை கிடைத்து வருகிறது. 

அமெரிக்காவில் 16.31 எம்.பி.பி.எஸ் வேகத்தில் மட்டுமே 4-ஜி சேவை கிடைக்கிறது. பாகிஸ்தானில் 13.56 எம்.பி.பி.எஸ் வேகமும், இலங்கையில் 13.95 எம்.பி.பி.எஸ் வேகமும் உள்ளது. ஆனால் இந்தியாவில் 4-ஜி சேவை சராசரியாக வெறும் 6.07 எம்.பி.பி.எஸ் வேகத்தில் மட்டுமே 4-ஜி சேவை கிடைக்கிறது.

இலங்கை, கஜகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிலும், இந்தியாவை விட 4-ஜி வேகம் அதிகமாக கிடைக்கிறது. 4-ஜி இணைப்புகளை அதிகம் வழங்கிய 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 86.26 சதவிகித பங்களிப்புடன் 14-வது இடத்தில் உள்ளது.

Trending News